வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக மாறி தமிழகத்தை நோக்கி வந்து கொண்டு இருக்கிறது. இந்த புயலுக்கு ‘கஜா’ என்று பெயரிடப்பட்டு இருக்கிறது. கடந்த 3 நாட்களாக கடல் பகுதியில் நிலைக்கொண்டிருந்த ‘கஜா’ புயல் இன்று  நிலப்பகுதியை நோக்கி வருகிறது.

தமிழகத்தில் கடலூர்-பாம்பன் இடையே இன்று மாலை முதல் கரையை கடக்க இருக்கிறது என்றும், கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பலத்த காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

சென்னையை பொறுத்தவரையில் 15-ந் தேதி முதல் 3 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் சென்னை அதன் சுற்றுவட்டார பகுதிகளான கோயம்பேடு, கிண்டி ,ஈக்காட்டு தாங்கல், வடபழனி,, வளசரவாக்கம்,போரூர், வண்டலூர், அம்பத்தூர், குன்றத்தூர் , மாங்காடு, காட்டுப்பாக்கம், ஆவடி, ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது.

நள்ளிரவில் தொடங்கிய மழை தொடாந்து ஆங்காங்கே பெய்து வருகிறது.