செங்கல்பட்டு மாவட்டம் சென்னை திருச்சி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பழைய பாலாற்று பாலத்தின் சீரமைப்பு பணிகள் நிறைவு பெற்றுள்ளதால், நாளை நள்ளிரவு முதல் பொதுபோக்குவரத்து அனுமதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  

செங்கல்பட்டு மாவட்டம் சென்னை திருச்சி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பழைய பாலாற்று பாலத்தின் சீரமைப்பு பணிகள் நிறைவு பெற்றுள்ளதால், நாளை நள்ளிரவு முதல் பொதுபோக்குவரத்து அனுமதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய 50 ஆண்டுகாலம் பழமை வாய்ந்த செங்கல்பட்டு மாவட்டம் மாமண்டூர் பாலாற்று பாலத்தில் பழுது ஏற்பட்டது. தொடந்து அந்த வழியாக செல்லும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு,மூழு வீச்சில் சீரமைப்பு பணிகள் நடைபெற்றன.கடந்த 7ம் தேதி முதல் சீரமைக்கும் பணி தொடங்கி, 20 நாள்களுக்கு மேல் நடைபெற்றது.

தென்மாவட்டங்களுக்கு செல்லக் கூடிய முக்கியமான பாதையில் பாலத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்ததால் பயணிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினார். குறிப்பாக தென்மாவட்டங்களில் இருந்து சென்னை வருபவர்களுக்கு மாற்றுப்பாதை தூரமாக இருந்ததால் அவர்களுக்கு அவதிக்கு உள்ளாகினர்.

இந்நிலையில்சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பாலாற்றின் குறுக்கே உள்ள பழைய பாலம் தற்போது புதுப்பிக்கப்பட்டு நாளை நள்ளிரவு முதல் பொதுப் போக்குவரத்துக்கு திறந்து விடப்படும் என தேசிய நெடுஞ்சாலை துறை இயக்குனரகம் அறிவித்துள்ளது.

முன்னதாக பாலாற்று பாலம் பராமரிப்பு பணி காரணமாக, புக்கத்துறை கூட்டு சாலையில் இருந்து பழைய சீவரம் வழியாக செங்கல்பட்டுக்கு கனரக வாகனங்கள் பேருந்துகள் அனுமதிக்கப்பட்டு வருகிறது. மேலும் இருசக்கர வாகனங்கள், கார் உள்ளிட்ட வாகனங்களை மெய்யூர், பிலாப்பூர் வழியாக செங்கல்பட்டு காஞ்சிபுரம் சாலை வழியாக சென்று சென்னை செல்கிறது. சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய வாகனங்கள் மட்டுமே புதிய பாலத்தில் அனுமதிக்கப்படுகின்றன.