நிலவுக்குச் சென்று மனிதர்கள்  குடும்பம் நடத்த வேண்டிய தூரம் வெகு தூரத்தில் இல்லை என்றும் இன்னும் சில ஆண்டுகளில் அது சாத்தியப்படும் எனவும்  சந்திராயன் விண்கலத்தின் முன்னாள் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.


கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சந்திராயன் விண்கலத்தின் முன்னாள் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டார், பின்னர் அந்த நிகழ்ச்சியில் அவர் உரையாற்றினார். அதன் விவரம் பின்வருமாறு :- கடுமையான போராட்டத்திற்கு பின், நமது விஞ்ஞானிகளின் கடுமையான உழைப்பில் சந்திராயன் விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது, அனைத்து நாடுகளையும் இந்தியாவை திரும்பி பார்க்கவைத்துள்ளது சந்திராயன்2 என்றால் மிகையல்ல .  இந்தியா அறிவியல் தொழில்நுட்பத்திலும், வான்ஆராய்ச்சியிலும் தலைசிறந்து விளங்குகின்றது என்பதற்கு இதுவே சாட்சி, என்றார், செப்டம்பர் 7 ஆம் தேதியை  உலகமே எதிர்நோக்கி காத்திருப்பதாகவும், இந்தியாவின் 130கோடி மக்களும், நிலவிற்கு திரும்பவும்  செல்ல வேண்டும் என்று நினைக்கும் உலக நாடுகளும் அந்த நாளை எதிர்நோக்கி காத்துள்ளனர். 

இன்னும் 50 அல்லது 60 ஆண்டுகளில் மனிதர்கள் வாழும் பகுதியாக நிலவும், செவ்வாயும், இருக்கும் என இஸ்ரோ முன்னாள் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாத்துரை தெரிவித்துள்ளார்.விஞ்ஞானிகள் மற்றும் உலக நாடுகளிடையேயான பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சந்திரயான் 2 விண்கலம் கடந்த ஜீலை 22 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. நிலவைப் பற்றி ஆராய்ச்சி செய்வதற்காக, இஸ்ரோ நிறுவனம் சந்திரயான் 2 விண்கலத்தை தயார் செய்துள்ளது. இது நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கி, அங்கேயே வலம் வந்து, நிலவில் ஆராய்ச்சியை மேற்கொள்ளும். இதனால் நிலவில் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள், பூமி உருவான விதம் உள்ளிட்ட பல்வேறு உண்மைகள் தெரியவரும் என்பது கூடுதல் தகவல்.