Asianet News TamilAsianet News Tamil

கனமழையால் செல்போன் சேவைக்கு ஆபத்து… பல செல்போன் டவர்கள் முடங்கின!!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக செல்போன் டவர்களின் செயல்பாடுகள் இழந்துள்ளன. குறிப்பாக சென்னையில் உள்ள ஏராளமான டவர்களின் செயல்பாடுகள் முடங்கியதை அடுத்து சிக்னல்கள் செயலிழந்துள்ளன.

cellphone tower service cut off due to rain
Author
Chennai, First Published Nov 7, 2021, 4:58 PM IST

வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகள் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றன. சென்னையில் நேற்று நேற்று இரவு தொடங்கிய மழை விடிய விடிய பெய்ததை அடுத்து சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் சாலையில் தேங்கிய வெள்ள நீர் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின. மேலும் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ள நீர் புகுந்துள்ளதால் அதனை வெளியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் வெள்ளநீர் குடியிருப்புகளில் சூழ்ந்துள்ளதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர். பொதுவாக சென்னையில் மழை பெய்யும் போது வெள்ளம் வருவதும், வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுவதும் வழக்கமான விஷயம் என்றாலும் தற்போது பெய்துள்ள மழை இந்த வருடத்தில் பெய்த மழையில் இதுவே அதிக மழை எனக்கூறப்படுகிறது. இந்த நிலையில் சென்னையில் பல்வேறு பகுதிகளில் செல்போன் சிக்னல் செயலிழந்துள்ளது. தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக செல்போன் டவர்களில் பிரச்சனைகள் ஏற்பட்டு சிக்னல்கள் செயலிழக்க தொடங்கியுள்ளன. இந்த மழை நீடித்தால் அனைத்து சிக்னல்களும் செயலிழக்கும் என மக்கள் அஞ்சுகின்றனர். ஏற்கனவே பல பகுதிகளில் சிக்னல் பிரச்சனைகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் மொபைல் போன் டவர்கள் செயலிழக்கத் தொடங்கியதாக கூறப்படுகிறது. மழை தொடர்ந்து பெய்து வருவதால் செல்போன் டவர்களில் பழுது ஏற்பட்டு அதன் செயல்பாடு முற்றிலும் முடங்கிவிடுகிறது. வழக்கமாக மின் பற்றாக்குறை, எரி பொருள் பற்றாக்குறை போன்ற காரணங்களுக்காக செல்போன் டவர்களின் செயல்பாடுகளில் பிரச்சனை ஏற்படும் நிலையில் தற்போது, பெய்து வரும் மழை காரணமாக அவற்றின் செயல்பாடு முற்றிலுமாக முடங்கிவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.

cellphone tower service cut off due to rain

இந்த நேரத்தில் பழுது நீக்கவோ, மாற்று ஏற்பாடு செய்யவோ ஏற்ற சூழல் இல்லாததால் நகரின் பல பகுதிகளில் செல்போன் சிக்னல்கள் செயலிழந்துள்ளன. இதனால் இப்பிரச்சனை தற்போது மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே தமிழ்நாட்டில் மொபைல் போன் டவர்களை பராமரிக்கும் பணியை மேற்கொள்ளும் நிறுவனங்களின் வரிசையில் மிக முக்கிய தொலை தொடர்பு சேவையை வழங்கும் நிறுவனங்களின் டவர்களை பராமரிக்கும் முக்கிய நிறுவனம் ஒன்றின் நிலவரப்படி, மதியம் 1 மணி வரை வடசென்னையில் 38 டவர்களும் தாம்பரத்தில், ஈரோடு, மதுரை, புதுச்சேரி, தஞ்சாவூர், திருப்பூர் ஆகிய பகுதிகளில் தலா ஒரு டவர், வேளச்சேரியில் 15 டவர்கள், சிவகாசியில் 3 டவர்கள் என தமிழகம் முழுவதும் மொத்தம் 62 டவர்களின் செய்ல்பாடுகள் முடங்கியுள்ளன. அதன் அடிப்படையில் இந்த டேட்டா அடிப்படையில் அதிகபட்சமாக தமிழ்நாட்டில் சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் தான் அதிக டவர்கள் செயலிழந்துள்ளன என கூறப்படுகின்றன. மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை விட ஒருசில பகுதிகளில் கூடியிருக்கலாம் அல்லது குறைந்திருக்கலாம் என கூறப்படும் நிலையில், மழை அதிகரித்தால், அதன் அளவு பல மடங்காகும் என்றும் குறிப்பாக இரவில் அதனுடைய பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios