திருப்பூர் அருகே கார் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நேதாஜி தெருவைச் சேர்ந்தவர் முத்துசாமி. இவர் ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக பணியாற்றி வந்தவர். ஜோதிமணி (60). இவர்களது பேரன் செல்வருத்ரன்(3), உறவினர் நாச்சிமுத்து (75). ஆகியோர் ஒரு காரில் உடுமலையில் உள்ள முத்துசாமியின் இளைய மகளை பொங்கல் பண்டிகைக்கு அழைப்பதற்காக சென்றனர். 

காரை முத்துசாமி ஓட்டியதாக கூறப்படுகிறது. கார் கொண்டாரசம்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் சென்றிக்கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பிறகு மரத்தின் மோதி மோதியது. இந்த விபத்தில் ஜோதிமணி, நாச்சிமுத்து, சிறுவன் செல்வருத்ரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபத்து தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் படுகாயமடைந்து உயிருக்கு போராடிய முத்துசாமியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் உயிரிழந்த 3 பேர் உடல்களை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.