Asianet News TamilAsianet News Tamil

வானொலியில் இந்தி திணிப்பு ரத்து..! பா.ம.க.வின் போராட்ட எச்சரிக்கைக்கு கிடைத்த வெற்றி- ராமதாஸ்

வானொலி நிகழ்ச்சிகளை வடிவமைப்பதில் உள்ளூர் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். இல்லாவிட்டால் மக்களின் வெறுப்பை சம்பாதிக்க நேரிடும். இதை உணர்ந்து இனி வரும் காலங்களில் செயல்படவேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
 

Cancellation of Hindi imposition on the radio A victory for pmk  protest alert Ramadoss
Author
First Published Oct 4, 2022, 1:02 PM IST

வானொலியில் இந்தி திணிப்பு

காரைக்கால் வானொலி நிலையத்தின் பண்பலைவரிசையில் ஒலிபரப்பப்பட்டு வந்த தமிழ் நிகழ்ச்சிகளின் நேரத்தை குறைத்து விட்டு, தினமும் 4 மணி நேரம் இந்தி நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்பட்டு வருகின்றன.  பிரசார் பாரதி நிறுவனத்தின் இந்த அப்பட்டமான இந்தித் திணிப்பு கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும் என அரசியல் கட்சிகள் விமர்சித்து இருந்தன். இதே போல பாமக நிறுனவர் ராமதாஸ் கடும் கண்டனத்தை தெரிவித்து இருந்தார். இந்தி திணிப்பை நிறுத்தாவிட்டால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என கூறியிருந்தார். இதனையடுத்து இந்தித் திணிப்பை பிரசார் பாரதி நிறுவனம் கைவிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 

Cancellation of Hindi imposition on the radio A victory for pmk  protest alert Ramadoss

இந்தி திணிப்பு ரத்து- ராமதாஸ்

அகில இந்திய வானொலியின் காரைக்கால் நிலையத்திலிருந்து கடந்த  2-ஆம் தேதி முதல் தினமும் 4 மணி நேரம் ஒலிபரப்பப்பட்டு வந்த  இந்தி நிகழ்ச்சிகள்  நேற்றிரவு  முதல் ரத்து  செய்யப்பட்டுள்ளன.  இந்தித் திணிப்பை பிரசார் பாரதி நிறுவனம் கைவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது! காரைக்கால் வானொலி மூலமான இந்தித் திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இது கைவிடப்படாவிட்டால் கடுமையான போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரித்து நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தேன். அதைத் தொடர்ந்து  இந்தி நிகழ்ச்சிகள்  திரும்பப்பெறப்பட்டுள்ளன. இது பெரும் மகிழ்ச்சியளிக்கிறது! வானொலி நிகழ்ச்சிகளை வடிவமைப்பதில் உள்ளூர் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். இல்லாவிட்டால் மக்களின் வெறுப்பை சம்பாதிக்க நேரிடும். இதை உணர்ந்து இனி வரும் காலங்களில் இந்தித் திணிப்பு முயற்சிகளில் பிரசார் பாரதி நிறுவனம் ஈடுபடக்கூடாது என ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படியுங்கள்

கஞ்சா வியாபாரிகளின் 2000 வங்கி கணக்குகள் முடக்கம்..! காவல்துறை அதிரடி நடவடிக்கை

Follow Us:
Download App:
  • android
  • ios