Asianet News TamilAsianet News Tamil

ஓடும் பஸ்சில் ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு !! லாவகமாக பேருந்தை நிறுத்தி பயணிகளை காத்து உயிரை விட்ட டிரைவர் !!

சென்னையில் ஓடும் பேருந்தில் ஓட்டுநருக்கு  திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால், அந்தப் பேருந்து 3 கார்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. ஆனாலும் அந்த டிரைவர் பேருந்தை லாவகமாக நிறுத்தி பயணிகள் உயிரைக் காத்ததுடன் ஸ்டீரிங்கிலேயே சாய்ந்து உயிரை விட்டார்.

Bus driver heart attack
Author
Chennai, First Published Oct 5, 2019, 8:30 PM IST

சென்னை கோயம்பேடு முதல் கேளம்பாக்கம் வரை செல்லும் பேருந்து தடம் எண் 570ஐ இயக்கிய ஓட்டுநர் ராஜேஷ் கண்ணாவுக்கு, வேளச்சேரி 100 அடி சாலையில் சென்றுக் கொண்டிருந்தபோது, மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனே பேருந்தின் வேகத்தை குறைத்துள்ளார். இருப்பினும் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் மீது பேருந்து மோதியது.

Bus driver heart attack

31 வயதான ஓட்டுநர் ராஜேஷ் கண்ணா, பேருந்தின் ஸ்டியரிங்கை பிடித்தபடியே உயிரிழந்தார். இந்த விபத்தில் 3 கார்களும், பேருந்தின் முன் பக்கமும் சேதமானது. நல்வாய்ப்பாக பயணிகளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.

பேருந்தில் பயணம் செய்த பயணிகள் ஓட்டுநர் ராஜேஷ்கண்ணாவை அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

Bus driver heart attack

ராஜேஷ்கண்ணா பேருந்தை உடனடியாக நிறுத்தியதால் எந்தவித பேராபத்தும் ஏற்படவில்லை. பேருந்தில் பயணித்த பயணிகள் வேறொரு பேருந்தில் சென்றனர். இந்த சம்பவமானது சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Follow Us:
Download App:
  • android
  • ios