முதல் தலைமுறை பட்டதாரி மாணவ, மாணவிகளுக்கு கல்வி கட்டணம் கிடையாது..! அமோக வரவேற்பில் கல்விக்கான பட்ஜெட் தாக்கல்..!

https://static.asianetnews.com/images/authors/fb8d4d14-0372-5b95-af41-84d4a15f3aeb.jpg
First Published 8, Feb 2019, 1:45 PM IST
budget alloted for tamilnadu education system
Highlights

2019 -2020 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார்.

முதல் தலைமுறை பட்டதாரி மாணவ, மாணவிகளுக்கு கல்வி கட்டணம் கிடையாது..! 

2019 -2020 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார்.

இதில் பல முக்கிய அம்சங்கள் உள்ளது. குறிப்பாக முதல் தலைமுறை பட்டதாரி மாணவ, மாணவிகளுக்கு கல்வி கட்டணத்தை திரும்ப செலுத்த 460.25 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என அரசு  தெரிவித்துள்ளது. இதன் மூலம் மாணவ மாணவிகள் நல்ல பலன் அடைவார்கள். பெற்றோர்களும் இந்த திட்டதற்கு வரவேற்பு தெரிவித்து உள்ளனர். 

மத்திய அரசிடம் இருந்து அனைவருக்கும் கல்வி இயக்கத்தின்கீழ் நிதி கிடைக்காவிட்டாலும் தமிழக அரசு தொடர்ந்து, இந்த திட்டத்தை கடைபிடிக்கும் என்றும் தமிழக அரசு தெரிவித்து உள்ளது. இதன் மூலம், இந்த ஆண்டுக்கு, பள்ளிக் கல்வித் துறைக்கு மட்டும் ரூ.28,757.62 கோடி செய்யப்பட்டு, குறைந்த செலவில் தரமான உயர் கல்வி பெறுவதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதுமட்டுமல்லாமல், 29 சுயநிதி கலை, அறிவியல் கல்லூரி துவங்க அனுமதி வழங்கி உள்ளதாகவும், அதே போன்று ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் பெயரில் புதிய காலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்ட அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்து உள்ளார். 

இதில் மிக முக்கியமான அறிவிப்பாக முதல் தலைமுறை பட்டதாரி மாணவ, மாணவிகளுக்கு கல்வி கட்டணத்தை திரும்ப செலுத்த 460.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என துணை முதல்வர்  பட்ஜெட்டில் அறிவித்ததே. மேலும், கட்டமைப்பை மேம்படுத்த அண்ணா பல்கலை.க்கு ரூ.100 கோடி நிதியம் கல்வித்துறைக்கு ரூ.4584.21 கோடி நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

loader