திருநெல்வேலி

உல்லாசமாக இருந்த வீடியோவை காட்டி மிரட்டி நண்பனுடன் சேர்ந்து காதலியை வன்புணர்வு செய்த காதலன் கைது செய்யப்பட்டார். நண்பரையும் கைது செய்தது காவல்துறை.

திருநெல்வேலி மாவட்டம், வடக்கன்குளத்தைச் சேர்ந்தவர் நம்பி மகன் சுரேஷ் (22).  இவருக்கும், கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 21 வயது பட்டதாரி பெண்ணுக்கும் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டது. 

இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறிய நிலையில் மூன்று மாதங்களுக்கு முன்பு காவல்கிணற்றில் உள்ள ஒரு விடுதியில், சுரேஷும் அந்த பெண்ணும் உல்லாசமாக இருந்தனராம். 

இதனை அந்த பெண்ணுக்கு தெரியாமல் சுரேஷ் படம் பிடித்து வைத்துள்ளார். பின்னர் சுரேஷும், அவரது நண்பர் வடக்கன்குளத்தை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் ஹரிஹரசுதனும் (22) சேர்ந்து இந்த ஆபாச படத்தை காட்டி அந்த பெண்ணை மிரட்டியோடு அல்லாமல் கற்பழித்துள்ளனர். 

இந்த நிலையில், சுரேஷ், ஹரிஹரசுதன் இருவரும் சேர்ந்து அந்த பெண்ணிடம் தங்களுக்கு ரூ.20 ஆயிரம் வேண்டும் என்றும், இல்லாவிட்டால் ஆபாச படத்தை முகநூலில் வெளியிட்டு விடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர்.

என்ன செய்வதென்று தெரியாமல் திணறிய அந்த பெண் பணகுடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். காவலாளர்களின் ஆலோசனைப்படி அந்த பெண் நேற்று காலை காவல்கிணறு சந்திப்புக்கு வந்தார். அங்கு அவரிடம் பணம் பெறுதற்காக சுரேஷ் மற்றும் ஹரிகரசுதன் வந்தனர்.  இருவரையும் பணகுடி காவலாளர்கள் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.