குளிரூட்டியில் இருந்து வெளியேறிய வாயுவால் கணவர் மனைவி குழந்தை மூன்று பெரும் மூச்சு திணறி ஒரே நேரத்தில் வீட்டில் உறங்கியபடியே இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

எனவே குளிரூட்டியை நம் வீட்டில் பயன்படுத்தும் போது நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்களை பார்க்கலாம்.

மூன்று மாதத்திற்கு ஒரு முறை சர்வீஸ் செய்ய வேண்டும்..

ISO சான்றிதழ் பெற்ற முறையான ஸ்டெபுலைசரை பயன்படுத்த வேண்டும் 

குளிர்காலத்தில் பெரிய அளவில் பயன்படுத்தப்படாத ஏசியை சர்வீஸ் செய்த பின்னரே பயன்படுத்த வேண்டும் 

அதிக மின்சாரம் வாட்ஸ் தாங்கக்கூடிய தரமான பிளக், ஸ்விட்ச் கேபிள் பயன்படுத்த வேண்டும் 

ஏசியை அவ்வப்போது சர்வீஸ் செய்ய வேண்டும்.

தங்கும் அறைகளின் அளவிற்கு ஏற்ப ஏசியை பயன்படுத்த வேண்டும் 

விலை குறைந்த மலிவான தரமற்ற ஸ்டேபுலைசரை பயன்படுத்த கூடாது.

உயர் மின்னழுத்தம் தாங்க முடியாத கேபிள், ஸ்விட்ச் பயன்படுத்தக் கூடாது 

அதே போன்று எதாவது பிரச்சனை வந்தால் தான் ஏசியை சர்வீஸ் செய்ய வேண்டும் என்று நினைக்க கூடாது 

பெரிய அறைக்கு குறைந்த செயல்திறன் கொண்ட ஏசியை பயன்படுத்தக்கூடாது என வல்லுனர்கள் தெரிவித்து உள்ளனர்.