Asianet News TamilAsianet News Tamil

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு…. சும்மா வெளுத்துக் கட்டும் காளையர்கள் !!

மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு தற்போது நடைபெற்று வருகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட காளைகளும், காளையர்களும் களமாடி வருகின்றனர்.

avaniyapuram jallikattu
Author
Madurai, First Published Jan 15, 2019, 10:27 AM IST

தமிழர் திருநாளான பொங்கல் நன்னாளில் புத்தாடை அணிந்து, பொங்கலிட்டு, சூரியனை வணங்குவதோடு ஜல்லிகட்டும் பாரம்பரிய கலாசாரத் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இன்று காலை மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு தொடங்கியது.

avaniyapuram jallikattu

மதுரை ஆட்சியர் நடராஜன் கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தார். அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்று கொண்டனர்.ஜல்லிக்கட்டு போட்டிக்காக 636 காளைகளும், 500 மாடுபிடி வீரர்களும் பங்கேற்கிறார்கள்.

avaniyapuram jallikattu

வாடிவாசலில் இருந்து துள்ளி வரும் காளைகளை தழுவ முதல் சுற்றில் 75 காளையர்கள் களத்தில் உள்ளனர். ஜல்லிக்கட்டில் வெற்றி பெறும் மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.  10 மருத்துவர்கள் கொண்ட மருத்துவக்குழு, 5 அவசர உதவி ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் உள்ளன.

avaniyapuram jallikattu

ஜல்லிக்கட்டுக்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளன. காளைகளுக்கும், வீரர்களுக்கும் காயம் ஏற்படாத வண்ணம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பார்வையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. முன்னதாக போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் அனைவருக்கும் மருத்துவக் குழுக்கள் பரிசோதனை செய்துள்ளன.

avaniyapuram jallikattu

வெற்றி பெறும் வீரர்களுக்கு தங்கக் காசு, தங்கச் சங்கிலி, பீரோ, கட்டில் உள்ளிட்ட பரிசுகளை வழங்க விழா கமிட்டியினர் ஏற்பாடு செய்துள்ளனர். மதுரை மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் மேற்கொள்ளப்பட்டுள்ளன. காளைகள் மற்றும் வீரர்களின் பாதுகாப்புக்காக களம் முழுவதும் தேங்காய் நார்கள் பரப்பபட்டு உள்ளது

Follow Us:
Download App:
  • android
  • ios