ஆட்டோ ஓட்டுநரைக் குத்திக் கொன்ற சங்கச் செயலாளர்; இதுக்கெல்லாம் கொலை பண்றாங்களே?
ஈரோட்டில், ஆட்டோ ஸ்டாண்டுக்குள் வண்டியை நிறுத்துவதில் ஓட்டுநருக்கும், சங்கத்தின் செயலாளருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் சங்கச் செயலாளர் கத்தியால் குத்தியதில் ஆட்டோர் ஓட்டுநர் உயிரிழந்தார்.
ஈரோட்டில், ஆட்டோ ஸ்டாண்டுக்குள் வண்டியை நிறுத்துவதில் ஓட்டுநருக்கும், சங்கத்தின் செயலாளருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் சங்கச் செயலாளர் கத்தியால் குத்தியதில் ஆட்டோர் ஓட்டுநர் உயிரிழந்தார்.
ஈரோடு மாவட்டம், சிவகரி பேரூராட்சி, சந்தி விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் தங்கம். இவரது மகன் ஆட்டோ ஓட்டுநரான இராமசுப்பு. இதேப் பகுதியில் உள்ள ஒன்றாம் திருநாள் மண்டகப்படித் தெருவைச் சேர்ந்தவர் குருசாமி. இவரது மகன் பொன்மாரி. இவர் சிவகிரி பேருந்து நிலையத்தில் உள்ள ஆட்டோ ஓட்டுநர் சங்கச் செயலாளராக இருக்கிறார்.
சிவகரி பேருந்து நிலையத்திற்குள்ளே இரவு 11 மணிக்குமேல் யாரும் ஆட்டோவை விடக்கூடாது என்று சங்கத்தில் முடிவெடுத்துள்ளனராம். இந்த சமயத்தில் கடந்த 14-ஆம் தேதி இரவு 11 மணிக்குமேல் இராமசுப்பு தனது ஆட்டோவை பேருந்து நிலையத்தின் உள்ளே கொண்டுவந்துள்ளார்.
இதனால் சங்கத்தின் செயலாளார் பொன்மாரி, இராமசுப்புவை அதட்டியுள்ளார். அதனை இராமசுப்பு எதிர்த்துக் கேள்வி கேட்டதால் இருவருக்குள்ளும் வாக்குவாதம் முற்றி தகராறு ஏற்பட்டது. இதன் விளைவு இராமசுப்புவை கத்தியால் குத்தினார் பொன்மாரி. இதில், பலத்த காயம் அடைந்த இராமசுப்புவை அருகில் உள்ள சிவகரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரௌண்ட் அரசு மருத்துவமனைய்யில் சேர்க்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்த நிலையில் சிகிச்சைப் பலனளிக்காமல் நேற்று முன்தினம் இராமசுப்பு மடிந்தார்.
இது தொடர்பாக விசாரித்து வந்த சிவகரி காவல் ஆய்வாளர் சுரேஷ் குமார், கொலைவழக்காக பதிவு செய்து பொன்மாரியை கைது செய்தார். அவரிடம் தற்போது விசாரணை நடைப்பெற்று வருகிறது.
ஆட்டோ ஸ்டாண்டுக்குள் வண்டியை நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில் ஓட்டுநர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் இந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.