ஆட்டோவில் தவறவிட்ட 80 ஆயிரம் ரூபாயை, உரியவரின் வீட்டுக்கு சென்று ஆட்டோ ஓட்டுநர் திருப்பிக் கொடுத்த நிகழ்வு மதுரையில் நடந்துள்ளது. பணத்தை பத்திரமாக திருப்பிக் கொடுத்த ஆட்டோ ஓட்டுநருக்கு பலர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

மதுரை மாவட்டம் பறவை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆட்டோ ஒன்றில் பயணம் செய்துள்ளார். அப்போது அந்த பெண், தன்னுடன் 80 ஆயிரம் ரூபாயைக் கொண்டும் சென்றிருந்தார்.

ஆட்டோவில் வீடு திரும்பிய அந்த பெண், அவசரத்தில், 80 ஆயிரம் ரூபாயை ஆட்டோவிலேயே மறந்து வைத்து விட்டு சென்றள்ளார். இதனை அறியாமல் ஆட்டோ ஓட்டுனரும் பணத்துடன் சென்றள்ளார். 

சிறிது நேரத்துக்குப் பிறகு, தன்னுடைய ஆட்டோவில் பை ஒன்று இருப்பதை பார்த்த அவர், அதில் 80 ஆயிரம் ரூபாய் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதன் பிறகு, கடைசியாக ஆட்டோவில் இருந்து இறக்கிவிடப்பட்ட பெண்ணின் வீடு தேடி சென்று அந்த பணத்தை திரும்பிக் கொடுத்தார். பணத்தை பத்திரமாக அவர் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநருக்கு அவர்கள் பாராட்டு தெரிவித்தனர். பல்வேறு தரப்பினரும் அந்த ஆட்டோ ஓட்டுநருக்கு பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.