Asianet News TamilAsianet News Tamil

சரவெடி சத்தம் அகில உலகம் எங்கும் ஒலிக்க… அண்ணாத்த பட டிரெய்லர் அப்டேட் இதோ…

அண்ணாத்த படத்தின் டிரெய்லர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகிறது.

Annaatthe trailer tomorrow
Author
Chennai, First Published Oct 26, 2021, 8:45 PM IST

சென்னை: அண்ணாத்த படத்தின் டிரெய்லர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகிறது.

Annaatthe trailer tomorrow

எந்த வருடமும் இல்லாத தீபாவளி இந்த வருடம் ரஜினிகாந்த ரசிகர்களுக்காக காத்திருக்கிறது. காரணம் இரட்டை தீபாவளி… பால்கே விருது மகிழ்ச்சி, அண்ணாத்த தீபாவளி ரிலீஸ் என குஷியில் குத்தாட்டம் போடும் ரேஞ்சுக்கு உள்ள ரசிகர்களுக்கு அடுத்த இன்ப அதிர்ச்சி வெளியாகி இருக்கிறது.

அதாவது அண்ணாத்த படத்தின் டிரெய்லர் நாளை மாலை 6 மணிக்கு வெளியிடப்படுவதாக பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்து உள்ளது. அண்ணாத்த படம் இயக்குநர் சிறுத்தை சிவா கைவண்ணத்தில் உருவாகி இருக்கிறது. டி இமான் இசையில் ஏற்கனவே பாடல்களை உருட்டி, புரட்டி எடுத்து ரசிகர்கள் பாடி வருகின்றனர்.

Annaatthe trailer tomorrow

படத்தின் ஒட்டு மொத்த பணிகளும் நிறைவடைந்து இப்போது படத்தின் டிரெய்லரும் நாளை வெளியாகிறது. தீபாவளிக்கு 10 நாட்களே உள்ளதால் பட புரோமேஷன் வேளைகளில் படக்குழு அதி தீவிரமாக வேலை செய்கிறது.

கடந்த 14ம் தேதி வெளியிட்ட அண்ணாத்த டீசர் பெரும் வெற்றியை குவித்திருந்தது. நாளை டிரெய்லரும் புது சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Follow Us:
Download App:
  • android
  • ios