என்றைக்குமே எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருக்க வேண்டும்..! சரோஜா தேவி அதிர்ச்சி பேச்சு..!

https://static.asianetnews.com/images/authors/fb8d4d14-0372-5b95-af41-84d4a15f3aeb.jpg
First Published 18, Dec 2018, 6:32 PM IST
always edapadi palanisamy should be as chief minister says actress saroja devi
Highlights

சென்னையில் தற்போது தொடங்கியுள்ள திருவையாறு நிகழ்ச்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார். இத்தனை ஆண்டுகளில் தமிழக முதலமைச்சர் ஒருவர் இந்த நிகழ்ச்சியை துவக்கி வைப்பது இதுவே முதல் முறை என்பது கூடுதல் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

சென்னையில் தற்போது தொடங்கியுள்ள திருவையாறு நிகழ்ச்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.
இத்தனை ஆண்டுகளில் தமிழக முதலமைச்சர் ஒருவர் இந்த நிகழ்ச்சியை துவக்கி வைப்பது இதுவே முதல் முறை என்பது கூடுதல் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

14 ஆம் "சென்னையில் திருவையாறு" நிகழ்ச்சியை இன்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். அப்போது மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வாநாதனின் மெழுகு சிலையை முதல்வர் திறந்து வைத்து பேசினார். இந்த நிகழ்ச்சியில் பழம்பெரும் நடிகை சரோஜாதேவி அவர்களும் கலந்து கொண்டார். அப்போது பேசிய நடிகை சரோஜாதேவி "என்றைக்கும் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருக்க வேண்டும்" என்று பெருமிதமாக தெரிவித்தார்.

இதில் என்ன கூடுதல் சிறப்பு என்றால் இதற்கு முன்னதாக கருணாநிதி முதல்வராக இருந்த போதும், ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை சரோஜாதேவி இதேபோன்று "கலைஞர் கருணாநிதி அவர்கள்" தான் எப்போதும் முதல்வராக இருக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

அதுமட்டுமல்லாமல் எம்ஜிஆர் ஆட்சியின் போதும் இதே டயலாக்கை தெரிவித்திருந்தார். அதுமட்டுமல்ல மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியின் போதும் தான் பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில் என்றும் செல்வி ஜெயலலிதா அவர்கள் முதல்வராக இருக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

ஆக மொத்தத்தில் நடிகை சரோஜாதேவி அவர்கள் எந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும் அந்த நிகழ்ச்சி அரசு தொடர்பான நிகழ்ச்சி என்றால் அப்போது ஆட்சியில் இருக்கும் நபரை புகழ்ந்து பேசுவதில் வல்லமை மிக்கவர் அதுவும் முதல்வர் என்றால்,
எந்த ஆட்சியாக இருந்தாலும் சரி ஆட்சி மாறினாலும் சரி, முதல்வர் குறித்து வாழ்த்துரையை வழங்கும்போது, ஆட்சியில் இருக்கும் முதல்வர் பற்றி, இதே முதல்வர்தான் எப்போதும் ஆட்சியில் இருக்க வேண்டும் என பெருமையாக பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளார் பழம்பெரும் நடிகை சரோஜா தேவி என்பது குறிப்பிடத்தக்கது.

loader