கடந்த மாதம் கஜா புயலின் ஏற்பட்ட தாக்கத்திலிருந்து இன்னும் நாகை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய டெல்டா மாவட்ட மக்கள் மீண்டு வராத நிலையில் நாளை முதல் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவான குறைத்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடந்த மாதம் பரவலாக மழை பெய்தது. பின்னர், 25 தேதிக்கு மேல் வறண்ட வானிலை நிலவி வருகிறது.

இந்த நிலையில் தற்போது வங்க கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக வருகிற 4 ,5 , 6 , ஆகிய தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அதிக அளவில் மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மேலும், தென் கிழக்கு வங்க கடம் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ் நிலை உருவாகியுள்ளதாகவும், இது மேற்கு நோக்கி நகரும் பட்சத்தில் 4 , 5 ,6 , ஆகிய தேதிகளில் தமிழகம் மற்றும் புதுவையில் மழை வலுக்கும் என வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ். பாலச்சந்தர் தெரிவித்துள்ளார். 

இதன் காரணமாக நாளை புதுவை கடலோர மாவட்டத்தில் அநேக இடங்களிலும், உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் லேசான மழை இருக்க வாய்ப்புகள் அதிகம் என்று வானிலை ஆய்வு மையம் தெறிவித்துள்ளது.