கனமழைக்கு மீண்டும் வாய்ப்பு...  உள்மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகிறது மழை...

கஜா புயல் புரட்டி எடுத்த, நிவாரணம் கூட இன்னும் முடிவடையாத நிலையில், தமிழகத்தில் மீண்டும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நவம்பர் 19 தேதி, கடலோர மாவட்டங்களில் நிச்சயம் மழை பெய்யும். அன்றே வட கடலோர உள் மாவட்டங்களில் நல்ல மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 

இது மட்டும் இன்றி, வரும் 20  மற்றும் 21  ஆம் தேதிகளில், தமிழகத்தில் உள் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கனமழை பெய்ய அதிக வாய்ப்பு உள்ளது.

ஏற்கனவே கஜா புயலால் புதுக்கோட்டை, நாகை, திருவாரூர், திருச்சி, திண்டுக்கல், மாவட்டங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில்... கஜா புயல் தாக்கத்தால் வரக்கூடிய இந்த மழையும் ஓரளவு சேதத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. 

எனவே விவசாய நிலங்களில் நடந்து செல்லும் போது மின் கம்பங்கள், மின் கம்பிகள், ஆகியவற்றின் அருகே ஜாக்ரதையாக செல்ல வேண்டும், அதே போல் மரங்களில் அடியில் ஒதுங்க கூடாது, ஆபத்தான இடங்களில் இருந்து விலகி இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.