சிறுவனை மீட்பதில் தமிழக அரசுக்கு முறையான தொழில் நுட்ப அறிவு இல்லை என்றும் சிலர் விமர்சிக்கின்றனர். மீட்புப் பணியின்போது கூடவே இருந்து வரும் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணியும் ‘பிளான் பி இல்லாமல் மீட்பு பணி நடைபெற்று வருவதாகவும் இயந்திரத்தால் முடியாதபட்சத்தில் மீட்புக்குழுவினரின் நடவடிக்கை மக்களை ஏமாற்றுவதாகவே இருக்கும் என்றும் தெரிவித்தார்.

ஆழ்துளைக் குழிக்குள் விழுந்த பச்சிளம் பாலகன் சுர்ஜித்தை மீட்பதில் ஏற்படும் தாமதத்துக்கு, தமிழக அரசையும் முதல்வர் எடப்பாடியையும் குறை கூறுபவர்களை, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலடி கொடுத்து வருகிறார் நகைச்சுவை நடிகரும் முன்னாள் எம்.எல்.வுமான எஸ்.வி.சேகர்.

சிறுவன் சுர்ஜித் ஆழ்துளைக் குழிக்குள் விழுந்து தற்போது 70 மணி நேரத்துக்கும் மேல் ஆகியுள்ள நிலையில் பல பிரபலங்கள் தமிழக அரசின் இயலாமையை விமர்சிக்க ஆரம்பித்துள்ளனர். சிறுவனை மீட்பதில் தமிழக அரசுக்கு முறையான தொழில் நுட்ப அறிவு இல்லை என்றும் சிலர் விமர்சிக்கின்றனர். மீட்புப் பணியின்போது கூடவே இருந்து வரும் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணியும் ‘பிளான் பி இல்லாமல் மீட்பு பணி நடைபெற்று வருவதாகவும் இயந்திரத்தால் முடியாதபட்சத்தில் மீட்புக்குழுவினரின் நடவடிக்கை மக்களை ஏமாற்றுவதாகவே இருக்கும் என்றும் தெரிவித்தார்.

Scroll to load tweet…

இதை ஒட்டி ஜோதிமணிக்கும் மற்றவர்களுக்கும் தனது ட்விட்டர் பதிவில் பதிலளித்த எஸ்.வி.சேகர்,...இயந்திரம் மூலம் மீட்புப்பணி செய்வது மக்களை ஏமாற்றும் செயல்- ஜோதிமணி! எப்படி கடன் தள்ளுபடி, மாசம் ₹6000/-,சிறந்த நிவாகம் இப்படியெல்லாம் பொய் சொல்லி ஜெயிச்சீங்களே அது போலவா😂Don’t open your mouth & SHOW UR IGNORANCE என்றும்,....உள்ள விழுந்ததை சிதையாமல் எடுப்பதும், உள்ளிருந்து வருவதை எடுப்பதற்கும் உள்ள வித்தியாசம் தெரியாதவர், பல் துலக்கும் பேஸ்ட்டை பிதிக்கி வெளியே எடுத்துவிட்டு மீண்டும் உள்ளே போட முடியாமல் பேஸ்டு கம்பெனியும் அரசும் நம்மை ஏமாற்றுவதாக அலறும் மடையர்கள். @CMOPalanisamy Genuine Efforts 👏 என்று சாடியுள்ளார்.