சென்னையை அடுத்த குன்றத்தூர் அருகே உள்ள மூன்றாம் கட்டளை திருவள்ளுவர் நகர், அங்கனீஸ்வரர் கோவில் தெருவில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வருபவர் விஜய் இவர், சென்னை தியாகராய நகரில் உள்ள ஒரு தனியார் வங்கியில்  பணியாற்றி வருகிறார்.

விஜயின் சொந்த ஊர் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி. சென்னை வங்கியில் வேலை கிடைத்ததால் இவர் சென்னையில் செட்டில் ஆகிவிட்டார்.இவரது மனைவி அபிராமி இவர்களுக்கு  அஜய், கார்னிகா என்ற இரு குழந்தைகள் இருந்தனர். இந்நிலையில் கள்ளக்காதலுக்காக இரு குழந்தைகளை கொன்றுவிட்டு நாகர்கோவில் தப்பிஓடிய அபிராமியை போலீஸார் கைது செய்தனர்..

அபிராமி அளித்த வாக்குமூலத்தில் மூன்றாம் கட்டளையில் உள்ள பிரியாணி கடைக்கு குழந்தைகளுடன் சென்று ஒரு நாள் பிரியாணி சாப்பிட்டேன்.அப்போது எனக்கும் அங்கு பில் போடும் பணியில் இருந்த சுந்தரத்துக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதன் பின்னர் அடிக்கடி அந்த கடைக்கு பிரியாணி வாங்க செல்வேன்.

இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. 2 மாதங்களாக நீடித்த எங்கள் கள்ளக்காதலை என்னால் விட முடியவில்லை. அதனால் கணவன், குழந்தைகளை கொல்ல திட்டம் தீட்டினேன் என்றார். தற்போது ஏன் இந்த காரியத்தைச் செய்தோம் என மிக வருந்துவதாக அபிராமி கதறி அழுதுள்ளார்.

உயிரிழந்த அபிராமி – விஜய் தம்பதிகளிள் அந்த 2 குழந்தைககளின் உடல்களையும் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்குப் பின்பு குழந்தைகளின் உடல் விஜயிடம் ஒப்படைக்கப்பட்டன.

அப்போது அந்த உடல்களைப் பார்த்து திருவள்ளுவர் நகரே கதறி அழுதது. உறவினர், நண்பர்கள் என அனைவரும் உடல்களைப் பார்த்து கண்ணீர்விட்டு கதறினர்.. பிஞ்சுகளின் உடல்களை அணைத்துக் கொண்ட விஜய்,  எட்டு ஆண்டு காதல் வாழ்க்கை பறிபோனது கூட பெரிதில்லை.. ஆனால் இந்த 2 குழந்தைளையும் அவள் அடிக்கக்கூட மாட்டாளே.. அப்படிப்பட்டவளுக்கு விஷம் கொடுத்து கொல்ல எப்படி மனது வந்தது என்று கதறி அழுதார்.

முதல் நாள் படுக்கை அறைக்குப் போய் அந்தக் குழந்தைகளை பார்த்திருந்தால் ஒரு குழந்தையையாவது காப்பாற்றியிருந்ந முடியுமே என்றும் விஜய் கண்ணிர் விட்டு கதறினார். இந்த சம்பவம் அப்பகுதி முழுவதையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.