சென்னையை அடுத்த குன்றத்தூர் அருகே உள்ள மூன்றாம் கட்டளை திருவள்ளுவர் நகர், அங்கனீஸ்வரர் கோவில் தெருவில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வருபவர் விஜய் இவர், சென்னை தியாகராய நகரில் உள்ள ஒரு தனியார் வங்கி பணியாற்றி வருகிறார்.

விஜயின் சொந்த ஊர் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி. சென்னை வங்கியில் வேலை கிடைத்ததால் இவர் சென்னையில் செட்டில் ஆகிவிட்டார்.இவரது மனைவி அபிராமி இவர்களுக்கு  அஜய், கார்னிகா என்ற இரு குழந்தைகள் இருந்தனர். இந்நிலையில் கள்ளக்காதலுக்காக இரு குழந்தைகளை கொன்றுவிட்டு நாகர்கோவில் தப்பிஓடிய அபிராமியை போலீஸார் கைது செய்தனர்..

அபிராமி அளித்த வாக்குமூலத்தில் மூன்றாம் கட்டளையில் உள்ள பிரியாணி கடைக்கு குழந்தைகளுடன் சென்று ஒரு நாள் பிரியாணி சாப்பிட்டேன்.அப்போது எனக்கும் அங்கு பில் போடும் பணியில் இருந்த சுந்தரத்துக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதன் பின்னர் அடிக்கடி அந்த கடைக்கு பிரியாணி வாங்க செல்வேன் குறிப்பிட்டுள்ளார்..

இதையடுத்து சுந்தரம் தன்னை அடிக்கடி தொடர்பு கொண்டு பிரியாணி வேண்டுமா என கேட்டதாகவும், அப்போது நீங்க ரொம்ப அழகா இருக்கிறீங்க என வர்ணித்துள்ளார். ஒரு கட்டத்தில் தனது உடல் பாகங்கள் ஒவ்வொன்றையும் குறித்து வர்ணித்துள்ளார். அதனால் தனக்கு காமம் தலைக்கு ஏறியதாகவும் அபிராமி  வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தங்களது தெருவில் உள்ள இளைஞர்கள் கூட தன்னிடம் வந்து பழக முயற்சி  செய்ததாகவும் குறிப்பிட்ட அபிராமி, தனது கணவரிடம் நெருங்கும்போதெல்லாம் அவர் விலகிச் சென்றதாகவும், இளமை வீணாகி வருவதாகவும் நினைத்த நான் கள்ளக் காதலில் விழுந்தேன் எனவும் தெரிவித்துள்ளார்.

கணவர் விஜய் இரவு டூட்டி சென்றுவிட்டு பகல் முழுவதும் தூங்கிவிடுவதாகவும், சுந்தரத்தின்  ஆறுதல் வார்த்தைகள் தன்னை முற்றிலும் அவர் பக்கம் இழுத்துச் சென்றதாகவும் அபிராமி கூறியுள்ளார்.

இந்தக் காமம்தான் தன்னை குழந்தைகளை கொல்லும் அளவுக்கு தூண்டிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். இறுதியில் காமம் கண்ணை மறைக்க இன்று அனைத்தையும் இழந்து நிற்பதாகவும் அபிராமி தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.