மகிழ்ச்சியான  ஒரு குடும்பத்தை விட்டு விட்டு வர அபிராமிக்கு எப்படித்தான் மனசு வந்ததோ என பொது மக்கள் வருத்தமடைந்துள்ளனர்.

சென்னையை அடுத்த குன்றத்தூர் அருகே உள்ள மூன்றாம் கட்டளை திருவள்ளுவர் நகர், அங்கனீஸ்வரர் கோவில் தெருவில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வருபவர் விஜய் இவர், சென்னை தியாகராய நகரில் உள்ள ஒரு தனியார் வங்கி பணியாற்றி வருகிறார்.

விஜயின் சொந்த ஊர் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி. சென்னை வங்கியில் வேலை கிடைத்ததால் இவர் சென்னையில் செட்டில் ஆகிவிட்டார்.இவரது மனைவி அபிராமி இவர்களுக்கு  அஜய், கார்னிகா என்ற இரு குழந்தைகள் இருந்தனர். இந்நிலையில் கள்ளக்காதலுக்காக இரு குழந்தைகளை கொன்றுவிட்டு நாகர்கோவில் தப்பிஓடிய அபிராமியை போலீஸார் கைது செய்தனர்..

அவர் அளித்த  வாக்குமூலம் அதிர்ச்சி அடையச் செய்தாலும் அழகான குழ்ந்தைகளை கொன்றுவிட்டு கணவரை விட்டு விட்டு ஓட எப்படித்தான் இந்த பெண்ணுக்கு மனது வந்ததோ என நினைக்க வைத்துள்ளது.

அவர் அளித்த வாக்குமூலத்தில் மூன்றாம் கட்டளையில் உள்ள பிரியாணி கடைக்கு குழந்தைகளுடன் சென்று ஒரு நாள் பிரியாணி சாப்பிட்டேன்.அப்போது எனக்கும் அங்கு பில் போடும் பணியில் இருந்த சுந்தரத்துக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதன் பின்னர் அடிக்கடி அந்த கடைக்கு பிரியாணி வாங்க செல்வேன்.

இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. 2 மாதங்களாக நீடித்த எங்கள் கள்ளக்காதலை என்னால் விட முடியவில்லை. அதனால் கணவன், குழந்தைகளை கொல்ல திட்டம் தீட்டினேன் என்றார். தற்போது ஏன் இந்த காரியத்தைச் செய்தோம் என மிக வருந்துவதாக அபிராமி கதறி அழுதுள்ளார்.

இது தொடர்பாக சமூக வலை தளங்களில் தற்போது வெளியிடப்பட்டுள்ள வீடியோ ஒன்று வைராலாகி வருகிறது. அதில் அபிராமி ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் கலந்து கொண்டு எத்தனை சந்தோஷமாக இருந்துள்ளார்.

அப்படி ஒர அன்பான குடும்பத்தை விட்டுவிட்டு வர எப்படி அவருக்கு மனம் வந்ததோ என்றும் அந்தப் பிஞ்சுக் குழந்தைகளை விஷம் வைத்துச் கொல்லும் அளவுக்கு அவரது மனம் கள்ளக் காதலில் வீழ்ந்ததோ எனவும் பொருமித் தள்ளுகின்றனர் பொது மக்கள்.