கடல் வழியாக உலகைச் சுற்றி வரும் கோல்டன் குளோப் சர்வதேச போட்டி, கடந்த ஜூலை 1 ஆம் தேதி தொடங்கியது. இந்த போட்டியில் இந்தியா சார்பில் கடர்படை அதிகாரி அபிலாஷ்டோமி கலந்து கொண்டார். 

படகு மூலம் கடந்த 84 நாட்களில் 10,500 நாட்டிக்கல் மைல் தூரத்தை கடந்து, தெற்கு இந்திய பெருங்கடலில் அபிலாஷ் வந்து கொண்டிருந்தார். அப்போது, ஏற்பட்ட புயலில் சிக்கினார் அபிலாஷ். புயல் காரணமாக, சுமார் 14 அடிக்கு அலைகள் எழுந்தது. இதனால் அபிலாஷ் சென்ற படகு அலைகழிக்கப்பட்டன. 

படகில் இருந்த அபிலாசுக்கு முதுகில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதனால் படகை விட்டு நகர முடியவில்லை. 130 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றும் வீசியதால், படகை செலுத்தவும் அபிலாஷால் முடியவில்லை. இதனைத் தொடர்ந்து தன்னை காப்பாற்றுமாறு, போட்டி நடத்தும் ஏற்பாட்டாளர்களுக்கும், இந்திய கடற்படைக்கும் அவர் தகவல் அனுப்பினார். 

அதன்பேரில் மொரீஷியசில் இருந்டது இந்திய கடற்படை விமானம் புறப்பட்டு, அபிலாஷை தேடியது. ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் இருந்து 1,900 நாட்டிக்கல் மைல் தொலைவில் அபிலாஷின் படகு கண்டுபிடிக்கப்பட்டது. அபிலாஷ் படகு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, இந்தியா மற்றும் ஆ1திரேலியா கடற்படைகளுக்க தகவல் தெரிவிக்கப்ப்டடது.