வேலூர் மாவட்டம் கல்லப்பாடியில் அமைந்துள்ளது அரசு மேல் நிலைப்பள்ளி. இந்த பள்ளியில் படிக்கும் ஒரு மாணவர் தொடர்ந்து பல சேட்டைகளை செய்து வந்துள்ளார். நாளுக்கு நாள் இந்த மாணவரின் சேட்டை அதிகரித்து வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று இந்த மாணவன் வகுப்பறையில் அமர்ந்துக்கொண்டு, தனது ஸ்மார்ட் போன் மூலமாக ஆயாக அமர்ந்துக்கொண்டு ஆபாச படம் பார்த்துக்கொண்டிருந்துள்ளார். இதை அப்போது வகுப்பு நடத்திக்கொண்டிருந்த ஆசிரியரிடம் சக மாணவன் போட்டுக்கொடுத்து உள்ளார்.

இதை அடுத்து அந்த மாணவர் அருகே சென்ற வந்த ஆசிரியர் அந்த மாணவனை கையும் களவுமாக பிடித்தார்.ஆபாச படம் பார்த்த மாணவன், ஆசிரியடம் சிக்கிக்கொண்டதால் தவறை ஒப்புக்கொண்டான். 

இந்த சம்பவம் அப்பள்ளி மாணவர்கள் மத்தியில்,பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்டூ படிக்கும் மாணவன் ஒருவர் வகுப்பறையில் ஆபாச படம் பார்த்து கையும் களவுமாக சிக்கி கொண்ட சம்பவம் அனைவர் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அந்த மாணவன் மீது நடவடிக்கை எடுக்க கூறி, பெற்றோர்- ஆசிரியர் கழகத்தினர் வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் புகார் அளித்தன் பேரில், மாவட்ட கல்வி அலுவலர் வீரமணி தலைமையில் கல்வித்துறை அதிகாரிகள் பள்ளிக்கு வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.தீவிர விசாரணைக்கு பிறகு மாணவன் மீது சுமத்தப்பட்ட குற்றசாட்டு, உண்மை என்பது தெரிய வந்தது.

இது மட்டுமின்றி அந்த சேட்டை மாணவன் பள்ளி மாணவர்களுக்கு உண்டான  தகுதிகளை மீறி பல லீலைகளை செய்து வந்து உள்ளான். உச்சக்கட்ட கேவலமான செயலாக 15 நாட்களாக ஆசிரியருக்கு அந்த மாணவன் காதல் தொல்லை வேறு கொடுத்து வந்துள்ளான். 

மேலும் ஆசிரியை மற்றும் மாணவிகளை பல்வேறு கோணங்களில் செல்போனில் ஆபாசமாக படம் பிடித்த மாணவன் அதை அவ்வப்போது பார்த்து ரசித்து வந்துள்ளான்.அரசு மேல் நிலைப் பள்ளியில், அனைத்து அரசு உதவிகளையும் பெற்று படித்து வரும் இந்த மாணவர் மிகவும் ஏழை குடும்பத்தை சேர்ந்தவராம். கஷ்டப்பட்டு படிக்க வைக்கும் பெற்றோரின் சுமைகளை அறியாமல், தான் தோன்றித்தனமாக தவறுதலாக செயல்பட்டு வரும் இந்த மாணவன் மீது எந்த மாதிரியான நடவடிக்கை எடுப்பது என்பது புரியாமல் கல்வித்துறை அதிகாரிகள் குழம்பி போயுள்ளனராம்.

மேலும் மாணவனின் இந்த செய்கையால் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் மிகுந்த வேதனை அடைந்து உள்ளனர்.