நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தகுமார். இவர்  சொந்தமாக  ஒரு ஆட்டோவை ஓட்டி வருகிறார்.

இந்நிலையில், ஆட்டோ ஓட்டுனரான இவர், இன்று அம்பாசமுத்திரத்தில் இருந்து சவாரி ஏற்றிக்கொண்டு நெல்லை நோக்கி சென்று உள்ளார். அப்போது நெல்லை பேட்டை என்ற பகுதியில் ஆட்டோ சென்று கொண்டிருந்த போது ஆட்டோ என்ஜினிலிருந்து, 5 அடி நீளம் கொண்ட பாம்பு ஆட்டோவிற்குள் வந்து உள்ளது. 

பாம்பை பார்த்த ஆட்டோவில் பயணித்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு கூச்சலிட, அனைவரும்  ஆட்டோவில் இருந்து  இறங்கினர். பின்னர் ஆட்டோ ஓட்டுனர் தீயணைப்பு  துறையினருக்கு தகவல தெரிவித்தனர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், கடும் போராட்டத்திற்கு பின் பாம்பை பிடித்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு  ஏற்பட்டு உள்ளது.