TN Govt : தமிழக முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் பொறுப்பேற்ற நாளில் இருந்து மீனவர்களுக்கான பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.
தமிழக மீன்வளத் துறை அமைச்சர் அனிதா ஆர் ராதாகிருஷ்ணன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசும்போது, ‘தமிழக முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் பொறுப்பேற்ற நாளில் இருந்து மீனவர்களுக்கான பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். மீனவர்களின் வாழ்வாதாரம் உயரும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

விவசாயிகளுக்கு தனி வங்கிகள் இருப்பது போல், மீனவர்களுக்கும் தனி வங்கி அமைக்க வேண்டும் என்ற வகையில் முதல்-அமைச்சர் எடுத்த நடவடிக்கையின் காரணமாக, தற்போது மீனவர்களுக்கான தனி வங்கி அமைப்பதற்கான ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் நிறைவு பெற்றவுடன் 3 மாதங்களில் மீனவர்களுக்கான தனி வங்கி தமிழகம் முழுவதும் தொடங்கப்படும்’ என்று பேசினார்.
இதையும் படிங்க : 90 சதவீதம் ஓகே.. நீங்க முரண்டு பிடிக்காதீங்க ஓபிஎஸ்.! எடப்பாடிக்கு ஆதரவாக குதித்த ராஜன் செல்லப்பா
