திருவள்ளூரில், பள்ளி ஆசிரியை கொலை செய்த வழக்கில் அவரது கணவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
 
திருவள்ளூரில் பரமசிவம் என்பவருக்கு, அவரது குடும்பத்தினர் பல ஆண்டுகளாக பெண் பார்த்து வந்து உள்ளனர். ஆனால் அவருக்கு திருமணம் ஆவதில் தொடந்து தாமதம் ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில் காந்திமதி என்ற பள்ளி ஆசிரியை பரமசிவத்திற்கு திருமணம் செய்து வைத்து உள்ளனர்.

ஆனால் பரமசிவம் குடி போதைக்கு அடிமையாகி  நாளடைவில் ஆண்மை இழந்துள்ள சம்பவம் திருமணத்திற்கு பிறகு காந்திமதிக்கு தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டு உள்ளது. மேலும், குடி பழக்கத்தால் ஆண்மை இழந்துள்ளதை பரமசிவத்தால் ஏற்றுக்கொள்ள முடியாமல், மனைவியின் மீது சந்தேகம் அடைந்துள்ளார். 

பின்னர் அவரை துண்டு துண்டாக வெட்டி தலையை  கால்வாயிலும், இடுப்பின் மேற்பகுதி உடற்பாகத்தை வீட்டின் அருகில் உள்ள ஒரு புதரிலும் போட்டு உள்ளார்.

மேலும், மற்ற பாகங்களை வீட்டின் குளியல் அறையில் வைத்துள்ளார். இது நாளடைவில் துர்நாற்றம் வீசவே வீட்டின் உரிமையாளருக்கு சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. பின்னர் அவர் காவல் துறையில் புகார் அளிக்க, இது குறித்து விசாரணை மேற்கொண்டு, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நடத்தப்பட்டு வந்தது.

இதில் பரமசிவம் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு  ஆயுள் தண்டனை வழங்கி  நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.