TEMPLE : அயோத்திக்கு ஆன்மிக சுற்றுலா.! 106 பேருக்கு போலி விமான டிக்கெட்- விமான நிலையத்தில் வெளியான ஷாக் தகவல்
அயோத்திக்கு ஆன்மிக சுற்றுலா அழைத்து செல்வதாக கூறி மதுரை பகுதி மக்களிடம் பணம் பெற்றுக்கொண்டு போலியான விமான டிக்கெட் கொடுத்து மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆன்மிக சுற்றுலா
ஆன்மிக சுற்றுலாவிற்கு பல்வேறு தனியார் நிறுவனங்கள் ஏற்பாடு செய்து வருகிறது. பேருந்து, ரயில், விமானம் மூலம் அழைத்து செல்லப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் ஏராளமானவர்கள் தாங்கள் விரும்பிய கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருவார்கள். இதற்காக பல்வேறு தனியார் ஏஜென்சி செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் குறைந்த கட்டணத்தில் விமானத்தில் ஆன்மிக சுற்றுலா அழைத்து செல்லப்படுவதாக சமூகவலைதளத்தில் விளம்பரம் செய்துள்ளது. இதனை நம்பி மதுரை மற்றும் அருகாமலையில் உள்ள மக்கள்ங குடும்பம், குடும்பமாக பதிவு செய்துள்ளனர். அயோத்தி சென்று கோயிலில் தரிசனம் செய்து விட்டு மீண்டும் திரும்பி வரும் வகையில் பணம் வசூலிக்கப்பட்டுள்ளது.
போலி விமான டிக்கெட்
அந்த வகையில் ஒருவருக்கு 29ஆயிரம் ரூபாய் என 106 பேர் பணம் கொடுத்துள்ளனர். இதனையடுத்து ஜூலை மாதம் 12ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை மதுரையில் இருந்து விமானம் என தெரிவித்துள்ளனர். இதனை நம்பிய ஆன்மிக சுற்றுலா செல்ல ஆசையாக மதுரை விமான நிலையத்திற்கு உடமைகளோடு வந்துள்ளனர். ஆனால் தனியார ஏஜென்சி நிறுவனத்தின் சார்பாக யாரும் வரவில்லை. இதனையடுத்து இண்டிகோ நிறுவன அலுவலகத்திற்கு சென்று கேட்டபோது அப்படி எந்த முன்பதிவும் செய்யவில்லையென கூறியுள்ளனர்.
பொதுமக்கள் ஏமாற்றம்
இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் விமான நிலைய ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்துனர். இதனையடுத்து நடந்த சம்பவம் தொடர்பாக கேட்டறிந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தொழில்நுட்ப வளர்ச்சி ஒருபக்கம் பெரிய அளவில் வளர்ந்தால் அதனை பயன்படுத்தி மோசடி செய்யும் கும்பலும் போட்டி போட்டு வளரந்து வருவது மக்கள் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.