செங்கல்பட்டு அருகில் உள்ளது சின்னாலம்பாடி. இந்த கிராமத்தில் நாகமலை அடிவாரத்தில் ஸ்ரீ சற்குரு  சதாசிவ பிரம்ம பீடத்தில் இருக்கக்கூடிய பெண் சாமியார் மாதா அன்ன பூரணியை பிரபல செய்தி தொலைக்காட்சி நிறுவனம் நேர்காணல் செய்தது. 

அப்போது பெண் சாமியார் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்து உள்ளார். அதில்....மறு ஜென்மம் பற்ற கேள்வி எழுப்பப்பட்டது. மறு பிறவி கட்டாயம் உள்ளது என்றும், ஜெயலலிதா , போகர் , கோரக்கர் கூட மறுபிறவி எடுத்து விட்டதாக கூறி உள்ளார் 

ஆன்மீகத்துல ராமானுஜர் சிஷ்யையாக இருந்தவர் தான் ஜெயலலிதா என்றும், கரிகால சோழனாக இருந்து ஆட்சி செய்தவர் தான் கருணாநிதி என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.மேலும் அவர் வைத்துள்ள சிலை பெயர் பாலா என்றும், தான் எப்போதொதேல்லாம் பாட்டு பாடி, அவளை  அழைக்கின்றேனோ அப்போதெல்லாம், அவள் வருவாள் என்று அன்ன பூரணி தெரிவித்து உள்ளார்.


 
இது ஒரு பக்கம் இருக்க, அன்ன பூரணிக்கு எப்போதெல்லாம் சாமி வருகிறதோ அப்போதெல்லாம் அவர் குழந்தை குரலில் பேசி வருகிறார்.மேலும் சென்னைக்கு கண்டிப்பாக பேரழிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றும், அதுவும் தண்ணீரில் தான் இந்த உலகம் அழியும் என்றும் தெரிவித்து உள்ளார். முதலில் வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டு பின்னர் உலக நாடுகள் பெரும் அழிவை சந்திக்கும் என தெரிவித்து உள்ளார். 
 
மேலும், அவர் பிறந்தது சென்னை என்றும், அவர் பிறந்த அடுத்த நாளே திருவண்ணாமலை அழைத்து சென்று விட்டதாகவும் அவர் கூறி உள்ளார்