செக்டார் 73ல், 4 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 7ம் வகுப்பு மாணவனை சிறுவர் நீதிமன்ற வாரியம். சீர்த்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைத்தது. நொய்டா செக்டார் 73ல், 7ம் வகுப்பு மாணவன் தனது பெற்றோருடன் வாடகை வீட்டில் வசித்து வந்தான். இவனது வீட்டின் அருகில் 4 வயது சிறுமியும் பெற்றோர் மற்றும் மூத்த சகோதரியுடன் வசித்து வருகிறாள்.

கடந்த திங்கள்கிழமை அன்று, கூலித்தொழிலாளிகளான இருவரது பெற்றோரும் வேலைக்கு சென்றுவிடவே, மாணவன் வீட்டில் தனித்து இருந்துள்ளான். சிறுமியின் சகோதரியும் வெளியே சென்று வருவதாகக் கூறி, சென்றுள்ளாள். இருவரும் தனியாக இருக்கவே, மாணவன் சிறுமியின் வீட்டுக்கு சென்று அவளுக்கு மிட்டாய் கொடுத்து, தனது வீட்டுக்கு வரும்படி அழைத்து சென்றுள்ளான். இந்நிலையில் பெற்றோர் மாலை வீடு திரும்பியதும், சிறுமி நடந்தவற்றை கூறியுள்ளார்.

இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவே, காவலர்கள் சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக மாவட்ட மருத்துவமனையில் சேர்த்தனர்.  சிறுமி பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டது உறுதியாகவே, போலீசார் சிறுவன் மீது ஐபிசி பிரிவு 377 மற்றும் போக்சோ விதி பிரிவு 3/4 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து சிறுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அதனைத்தொடர்ந்து அவன் சீர்த்திருத்தப்பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டான்.

இது குறித்து எஸ்எச்ஓ பங்கஜ் பேன்ட் கூறுகையில், ‘சர்பாபாத்தில் உள்ள பள்ளிக்கு செல்லாததால் சம்பவம் நடந்த அன்று மாணவன் வீட்டில் இருந்துள்ளான். சிறுமியின் பெற்றோரிடம் இருந்து தகவல் வந்ததும், நாங்கள் அவளை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினோம். அங்கு சிறுமி பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டது தெரிந்தது. சிறுமி மற்றும் அந்த மாணவனின் பெற்றோர் இருவரும் வேலைத்தேடி பல்வேறு பகுதிகளுக்கு செல்பவர்கள். தற்போது குழந்தைக்கு தகுந்த மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

உல்லாசத்துக்கு இடையூறாக இருந்த சிறுவனைக் கொன்ற கள்ளக்காதலன்...

சென்னை MGR நகரை அடுத்த பாரதிநகரை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மனைவி மஞ்சுளா. இவர்களது மகன் விசேஷ்சாய். அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று மாலை அருகில் உள்ள டியூசன் சென்டருக்கு சென்ற விசேஷ்சாய் பின்னர் திரும்பிவரவில்லை.

இது குறித்து எம்.ஜி.ஆர். நகர் போலீசில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து விசாரணை நடத்தி வந்தனர். அதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. மாணவனின் தாய் மஞ்சுளாவுக்கும் சேலையூரில் தங்கி ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் நாகராஜுக்கும் கள்ளக்காதல் இருப்பது தெரிந்தது.

இதையடுத்து சந்தேகம் அடைந்த போலீசார் சேலையூரில் பூட்டி இருந்த  நாகராஜின் அறைக்கதவை உடைத்து சென்று பார்த்தனர்.

அங்கு கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் மாணவன் விசேஷ்சாய் கொலை செய்யப்பட்டு கிடந்தான். அறை முழுவதும் ரத்தமாக காணப்பட்டது. விசேஷ்சாயை, கழுத்தை அறுத்து கொன்று விட்டு நாகராஜ் தப்பி இருப்பது விசாரணையில் தெரிய வந்தது. அவரை போலீசார் தேடிவருகிறார்கள்.

மனைவி மஞ்சுளாவுக்கும் நாகராஜுக்கும் தொடர்பு இருப்பது தெரிந்ததும் இருவரையும் கார்த்திகேயன் கண்டித்து உள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

மேலும் மாணவன் விசேஷ்சாயை அடிக்கடி நாகராஜ் டியூசனுக்கு அழைத்து சென்று விட்டு வந்தார். எனவே கள்ளக்காதலுக்கு இடையூறு ஏற்பட்ட ஆத்திரத்தில் அவர் மாணவனை கடத்தி கொலை செய்து இருப்பது தெரிந்தது. நாகராஜ் சிக்கினால் தான் கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா?

என்பது தெரியவரும். அவரை பிடிக்க தனிப்படை  போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொலை தொடர்பாக மாணவனின் தாய் மஞ்சுளாவிடமும் விசாரணை  நடத்த போலீசார் முடிவு செய்து உள்ளனர்.