தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு போதிய அளவு பெய்யவில்லை என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. 

ஆனால் திடீரென வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் மழை வெளுத்து வாங்கி வருகிறது.

மேலும் வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தம் காரணமாக நாளை மறுநாள் வரை கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. 

இந்நிலையில் தமிழகத்தில் இன்று அதிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால், ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும்  நாளை மிக கனமழை பெய்யும் என்பதால் ஆரெஞ்ச் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து தொடர் கனமழையால் சென்னை , காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், நாகை, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம்  ஆகிய 8 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது,.