சிங்கப்பூரில் இருந்து கடத்தி வரப்பட்ட சிகரெட், வெளிநாட்டு கரன்சியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 6 பேரை கைது செய்தனர்.

சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு இன்று அதிகாலையில் பயணிகள் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது, புதுக்கோட்டையை சேர்ந்த கணபதி என்பவர் சுற்றுலா பயணியாக சிங்கப்பூர் சென்று திரும்பினார். அவரது உடமைகளை சோதனை செய்தபோது, ரூ.3.5 லட்சம் வெளிநாட்டு கரன்சி, ரூ.10 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட் ஆகியவை இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

‘இதேபோல மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம் திருச்சிக்கு வந்த்து. அதில் திருச்சியை சேர்ந்த நவாஸ்,சிராஜுதீன், பீர் முகமது, நிசார், மைதீன் ஆகியோர் சுற்றுலா பயணியாக சென்று திரும்பினர்.‘

அவர்களது உடமைகளை சோதனை செய்தபோது, ரூ.10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெளி சிகரெட் பொட்டலங்களை மறைத்து கொண்டுவந்தது தெரிந்த்து. அதையும் பறிமுதல் செய்தனர். இதையடுத்து 6 பேரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.