Asianet News TamilAsianet News Tamil

குட்நியூஸ்! தமிழ்நாட்டில் மேலும் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள்.. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?

தமிழ்நாட்டில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் 11 மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. இது பெரும் சாதனையாக அப்போது பார்க்கப்பட்டது. பின்னர் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 2022ஆம் ஆண்டு ஒரே நேரத்தில் 11 கல்லூரிகள் திறக்கப்பட்டன. 

6 more new medical colleges in Tamil Nadu tvk
Author
First Published May 24, 2024, 11:46 AM IST | Last Updated May 24, 2024, 11:46 AM IST

தமிழ்நாட்டில் மயிலாடுதுறை, திருப்பத்தூர், தென்காசி உள்ளிட்ட இடங்களில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. 

தமிழ்நாட்டில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் 11 மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. இது பெரும் சாதனையாக அப்போது பார்க்கப்பட்டது. பின்னர் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 2022ஆம் ஆண்டு ஒரே நேரத்தில் 11 கல்லூரிகள் திறக்கப்பட்டன. மொத்தமுள்ள 38 மாவட்டங்களில் 32 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு மாவட்டத்திற்கு ஓர் அரசு மருத்துவக் கல்லூரி என்ற கொள்கையின் அடிப்படையில் புதிதாக பிரிக்கப்பட்ட காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தென்காசி ஆகிய 6 மாவட்டங்களில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட வேண்டும் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. 

இந்நிலையில் தமிழ்நாட்டில் மேலும் 6 புதிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளை அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.  மயிலாடுதுறை, திருப்பத்தூர், தென்காசி மாவட்டங்களில் முதற்கட்டமாகவும், பெரம்பலூர், அரக்கோணம், ராணிப்பேட்டையில் 2ம் கட்டமாகவும் புதிய மருத்துவக் கல்லூரிகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் பங்களிப்போடு அமைக்கப்படும் இந்த மருத்துவ கல்லூரிகளுக்கு 25 ஏக்கர் நிலத்தை அடையாளம் காணும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios