பெட்ரோல் - டீசல் விலையேற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மணமக்களுக்கு 5 லிட்டர் பெட்ரோல் பரிசாக வழங்கப்பட்ட நிகழ்வு கடலூரில் நடந்துள்ளது.

பெட்ரோல் - டீசல் விலை நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது. அத்தியாவசியப் பொருட்கள் விலை ஏற்றத்தாலும், பால், முட்டை,காய்கறிகள், பழங்களும் விலை உயர்ந்து வருவதால், மக்கள் சிரமத்துக்கு ஆளாகி இருக்கிறார்கள். பெட்ரோல், டீசல் விலையைக்குறைக்கக் கோரி போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடந்து வருகின்றன.

பெட்ரோல் - டீசல் உயர்வுக்கு அரசியல் கட்சிகள் ஒருவரையொருவர் குற்றம் சாட்டி வருகிறது.விண்ணை முட்டும் விலையில் பெட்ரோல் - டீசல் விலை உயர்ந்துள்ள நிலையில், மணமக்களுக்கு மொய் பணமாக 5 லிட்டர் பெட்ரோல் கொடுக்கப்பட்ட நிகழ்வு கடலூரில் நடந்துள்ளது. கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள குமாரச்சி கிராமத்தில் இளஞ்செழியன் - கனிமொழி ஆகியோருக்கு திருமணம் நடைபெற்றது. 

திருமணத்தையொட்டி வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மணமக்களின் உற்றார் உறவினர், நண்பர்கள், அக்கம்பக்கத்தை சேர்ந்தவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.வரவேற்பு விழாவுக்கு வந்தவர்கள், புதுமண தம்பதியருக்கு கிப்ட் கொடுத்தும், வாழ்த்துகள் கூறியும் வந்தனர்.