Asianet News TamilAsianet News Tamil

5 கிலோ வெங்காயம் 100 ரூபாய்தான்… அதுவும் தமிழ்நாட்டில் ! எங்கு தெரியுமா ?

கடலூர் உழவர் சந்தையில் 5 கிலோ வெங்காயம் 100 ரூபாய்க்கு விற்கப்படுவதால்  இதை வாங்க கூட்டம் அலை மோதுகிறது.

5 kg onion 100 rupees only
Author
Cuddalore, First Published Dec 11, 2019, 8:29 AM IST

மழையின் காரணமாக வட மாநிலங்களில் வெங்காயம் விளைச்சல் பாதியாக குறைந்து விட்டது. இதனால் கடந்த 4 மாதங்களில் வெங்காயம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த நவம்பர் முதல் வாரம் ஒரு கிலோ வெங்காயம் 60 ரூபாய்க்கு விற்பனையானது.

நவம்பர் 2-வது வாரம் 10 ரூபாய் உயர்ந்து கிலோ 70 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நவம்பர் கடைசியில் ஒரு கிலோ வெங்காயம் 100 ரூபாயை தொட்டது. டிசம்பர் 2-ந்தேதி ரூ.110 ஆக உயர்ந்தது.

5 kg onion 100 rupees only

டிசம்பர் 4-ந்தேதி (நேற்று) ரூ.140 ஆக உயர்ந்தது. இன்று 10 ரூபாய் உயர்ந்து கிலோ ரூ.150-க்கு உயர்ந்தது. கோயம்பேடு மார்க்கெட்டில் ரூ.150க்கு விற்கப்படும் வெங்காயம் அயனாவரம் கடைகளில் ரூ.160க்கு விற்கப்பட்டது. 

சில கடைகளில் ரூ.170-க்கு விற்பனையாகிறது. சூப்பர் மார்க்கெட் கடைகளில் ரூ.180 வரை விற்கிறார்கள். இதையடுத்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு 200 ரூபாய் வரை வெங்காயம் விற்கப்பட்டது.

இந்நிலையில் எகிப்து மற்றும் ஆஸ்திலேலியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் விற்பனைக்கு வந்துள்ளன. இதையடுத்து வெங்காயத்தின் விலை கணிசமாக குறையத் தொடங்கியுள்ளது.

5 kg onion 100 rupees only

அது மட்டுமல்லாமல் தமிழகத்தில் மழை குறைந்து விட்டதால் வெங்காயம் எந்த சிக்கலுமின்றி சந்தைக்கு வரத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில் கடலூர் உழவர் சந்தையில் 5 கிலோ வெங்காயம் 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதைக் கேள்விப்பட்ட பொது மக்கள் வெங்காயம் வாங்க கடலூர் உழவர் சந்தைக்கு படை எடுத்து வருகின்றன.

Follow Us:
Download App:
  • android
  • ios