இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வரும் 27 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது.  ஏற்கனவே ஞாயிற்றுக்  கிழமை விடுமறை என்பதால் பள்ளி மாணவர்களும் அரசு ஊழியர்களும் ஒரு நாள் விடுமுறை போய்விட்டதே என்று கலங்கிப் போயிருந்தனர்.

இதையடுத்த தீபாவளிக்கு முதல் நாள் சனிக்கிழமையை அரசு விடுமுறையாக கடந்த வாரம் தமிழக அரசு அறிவித்தது. இதனால் மகிழ்ச்சி அடைந்த பொது மக்கள், துபாவளிக்கு அடுத்த நாளும் விடுமுறை கிடைத்தால் நன்றாக இருக்கும் என நினைத்தனர்.

பொது மக்களின் இந்த ஆதங்கத்தைப் புரிந்து கொண் தமிழக அரசு தற்போது, தீபாவளிக்கு மறுநாள் வரும் 28 ஆம் தேதி (திங்கள் கிழமை) அரசு விடுமுறையாக அறிவித்து  அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக நவம்பர் 9 ஆம் தேதியை பணிநாளாக அறிவித்து அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.