சென்னை அயனாரவரத்தில் 11 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து வந்த 18 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்

மாற்றுதிறனாளியான மகளுக்கு கடந்த 7 மாதங்களாக பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக அவருடைய தாய் கொடுத்த புகாரின் அடிப்படையில் இதுவரை 18 பேரை கைது செய்து உள்ளனர்.

300 வீடுகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் பணியாற்றி வந்த18 பேரை இதுவரை கைது செய்து உள்ளனர் 

11 வயது மாற்றுத்திறனாளி சிறுமியின் அக்கா வெளியூரில் படித்து வந்துள்ளார். அவர் விடுமுறைக்கு சென்னை வந்து தன் அம்மா மற்றும் தங்கையுடன் நேர்த்தை கழித்துள்ளார்.

இந்நிலையில், தனது தங்கை நடந்த விவரத்தை சொல்லி அழுதுள்ளார். பின்னர் தன் தாயிடம் , தங்கைக்கு  நடந்த கொடுமையை  பற்றியும்,  கடந்த 7 மாதங்களாக நடந்த விவரத்தை சொல்லி உள்ளார்.

இதனை அறிந்து அதிர்ச்சியான தாய் அயனாவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில், அடுக்கு மாடி குடியிருப்பில் வேலை செய்து வந்த18 பேரை கைது செய்தனர்.

சந்தேகத்திற்கு இடமான அந்த நபர்களை வரிசையாக நிற்க வைத்து, அந்த பெண்ணிடம் அடையாளம் காட்ட சொல்லி கேட்கப்பட்டு அவர் உறுதி அளித்ததை அடுத்து இவர்கள்  அனைவரையும் கைது செய்து  உள்ளனர் போலீசார்

மேலும் அந்த சிறுமியிடம் எவ்வாறு நடந்துக் கொண்டனர் எது போன்ற பாலியல்  வன்புணர்வு செய்து உள்ளனர் என்ற பல கோணங்களில் விசாரணை  நடைபெற்று  வருகிறது.