கொடைக்கானல் பண்ணைக்காடு என்ற பகுதியில் பாலியல் அத்துமீறலை  கண்டித்த அத்தையை பதினோராம் வகுப்பு படிக்கும் மாணவி தன் காதலனுடன் அடித்துக் கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .  கொடைக்கானல் அருகே பண்ணைக்காடு பகுதியை சேர்ந்த கேசவன் என்பவரின் மனைவி சுந்தரி. கணவரை பிரிந்து அதே பகுதியில்  கூலி வேலை செய்து வருகிறார் .  இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த முருகானந்தம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அவருடன் சுந்தரி வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில்  முருகானந்தம் சென்னையில் மேஸ்திரியாக வேலை செய்து வருகிறார்.  சுந்தரி மட்டும் தனியாக வீட்டில் தங்கியுள்ள நிலையில் ,  மர்மமான முறையில் கடந்த 22ஆம் தேதி வீட்டில் இறந்து கிடந்தார்.  போலீஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், சுந்தரியின் உடலை கைப்பற்றிய போலீசார் வழக்கு பதிவு செய்து  விசாரணை நடத்தியுள்ளனர்.  அதில் ,  27ஆம் தேதி இரவு முருகானந்தத்தின் சகோதரியின் மகன் தாரணி சுந்தரியுடன் வந்து தங்கியதாக  தெரியவந்தது .  இதையடுத்து அவரிடம் விசாரித்ததில்  சுந்தரியை கொலை செய்ததாக  ஒப்புக்கொண்டார்  மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் பதினோராம் வகுப்பு படிக்கும் சதீஷ் என்ற மாணவருடன் அத்தையின் வீட்டில் உல்லாசத்தில் ஈடுபட்டதாகவும், அப்போது  அதை அத்தை சுந்தரி பார்த்து விட்டதுடன்.  

தன் விவகாரத்தை பெற்றோர்களிடம் கூறப்போவதாக மிரட்டியதால்,   காதலனுடன் சேர்ந்து துப்பட்டாவால் அத்தையை கழுத்தை இறுக்கி கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.  அடுத்து தாரணியை  பிடித்து மதுரை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் போலீசார் சேர்த்துள்ளனர்.  தலைமறைவாக உள்ள காதலன் சதீசை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்

Tik Tok-ல் புள்ளிங்கோ நடத்திய நிஜ கல்யாணம் .. சீரழிவுக்கு காரணமாகும் அதிர்ச்சி வீடியோ..!