நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த 108..! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மூவர்..!  

குமரேசன் என்பவரை கரூர் அரசு மருத்துவமனையில் இருந்து மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலமாக அழைத்து சென்றனர்.

அப்போது நடுவழியில் ஆம்புலன்ஸ் பழுதாகி நின்று உள்ளது. உடனடியாக வாகன ஓட்டுனர் கீழே இறங்கி சரி செய்ய முயன்றபோது திடீரென வாகனத்தின் முன் பகுதியில் தீப்பிடித்து எரிய தொடங்கியது. உடனடியாக வாகனத்தின் பின்பக்கமாக ஓடி வந்து உள்ளிருந்த குமரேசன் மற்றும் அவரது உறவினரை கீழே இறக்கி விட்டார். பின்னர் இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். 

அதற்குள் ஆம்புலன்சின் பாதிப்பகுதி அழிந்து விட்டது. இதில் அதிர்ஷ்டவசமாக குமரேசன் மற்றும் அவரது உறவினர்கள் வாகன ஓட்டுனர் அனைவரும் உயிர் தப்பினர். இதற்கு என்ன காரணம் என்றால் முறையாக பராமரிக்கப்படாமல் தொடர்ந்து வாகனத்தை பயன்படுத்தி வருவது என கூறப்படுகிறது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பல சமூக ஆர்வலர்கள் அவசர ஊர்தியை கண்டிப்பாக நன்முறையில் இயக்க சரியான பராமரிப்பு தேவை, இதுபோன்ற சம்பவம் இனி வரும் காலங்களில் நடக்கக்கூடாது என்றும் அதற்கேற்றவாறு பராமரிப்பும் மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை வைத்து உள்ளனர்.