பள்ளிகல்வித்துறை அமைச்சரகா திரு கே.ஏ. செங்கோட்டையன் அமைச்சாராக பொறுப்பேற்ற நாள் முதல் இன்று வரை அரசு பள்ளி மானர்வர்களுகாக பல்வேறு நலத்திட்டங்களையும் , பாடபுத்தக மாற்றம் என மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

1, 6, 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கான பாடநூல்கள் இந்த ஆண்டு முதல் புதியதாக கொண்டுவரப்பட்டு உள்ளது

மேலும் தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு நீட் தேர்வை எதிர்க்கொள்ள முடியாமல் தவித்து வருவதால், அவர்களுக்கு இலவசமாக கோச்சிங் கிளாஸ் ஏற்படுத்தப்பட்டது

இதற்காக மாவட்டம் தோறும் பல மையங்கள் நிறுவப்பட்டு உள்ளது. இதெல்லாம் ஒருபக்கம் இருக்க தமிழக அரசு பள்ளி மாணவர்களும் சிபிஎஸ்சி தரத்திற்கு உயர்ந்து படிக்கும் வகையிலும், அவர்களுக்கு ஆங்கில புலமை பெரும் வகையிலும் பள்ளிகல்வித்துறை அமைச்சர் திரு கே.ஏ செங்கோட்டையன் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்

அதன் ஒரு பகுதியாக, இந்த மாதம் முதல் தமிழக அரசு பள்ளி மானவர்களுக்கு ஆங்கில பயிற்சி வகுப்பு தொடங்கும் என தெரிவித்து  உள்ளார்

அதாவது ஆங்கிலம் ஓகே. ஆனால் ஆசிரியர்கள் எங்கிருந்து வருகிறார்கள் தெரியுமா ..?

லண்டனில் இருந்து 100 பேராசிரியார்கள் தமிழகம் வந்து ஆங்கில பயிற்சி எடுக்க உள்ளதாக அமைச்சர் கே.ஏ செங்கோட்டையன் தெரிவித்து  உள்ளார்

இதன் மூலம் தமிழக மாணவர்கள் நீட் தேர்வு மட்டுமில்லை....லண்டனுக்கு செல்ல தேவையான IELTS தேர்வு கூட அசால்டா எழுதிட்டு போய்கிட்டே இருப்பாங்க....இந்த நிலை மிக விரைவில் உருவாக உள்ளது என்பதற்கான சான்று தான் தற்போது லண்டன் பேராசிரியர்களின் ஆங்கில வகுப்பு

இந்த அறிவிப்பை கேட்டவுடன் மாணவர்கள் மிகவும் குதூகலமாகி உள்ளனர். பெற்றோர்களும் மாண்புமிகு அமைச்சருக்கு நன்றியை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.