Asianet News TamilAsianet News Tamil

மன நலம் பாதிக்கப்பட்ட நிர்மலா தேவிக்கு பிடிவாரண்ட்... கருணை காட்டாத நீதிமன்றம்..!

நிர்மலா தேவியின் வழக்கறிஞர் பசும்பொன் கூறுகையில், மன நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் நீதிமன்றத்தில் ஆஜராக முடியவில்லை என்று தெரிவித்தார். இதனைக் கேட்ட நீதிபதி பேராசிரியை நிர்மலா தேவிக்கு அளித்திருந்த ஜாமீனை ரத்து செய்து பிடிவாரண்ட் பிறப்பித்த நீதிமன்றம், வழக்கு விசாரணையை 28-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

srivilliputhur court arrest warrant agaisnt nirmala devi
Author
Tamil Nadu, First Published Nov 18, 2019, 3:18 PM IST

மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி இன்றும் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் அவரது ஜாமீனை ரத்து செய்து அதிரடியாக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் பயிலும் மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து சென்ற குற்றத்திற்காக பேராசிரியை நிர்மலா தேவி, பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு, சில மாதம் சிறையில் இருந்த நிர்மலா தேவி தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

srivilliputhur court arrest warrant agaisnt nirmala devi

இதையும் படிங்க;- மாணவிகளுக்கு உடலுறவு பற்றி புட்டு புட்டு வைத்த கணித ஆசிரியர்... அலேக்கா தூக்கி லாக்கப்பில் லாடம் கட்டிய போலீஸ்..!

இந்நிலையில், நிர்மலாதேவி உள்ளிட்ட மூன்று பேரும் நவம்பர் 18-ம் தேதி ஆஜராக வேண்டும் என ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டது. இன்றைய வழக்கு விசாரணையில், குற்றம்சாட்டப்பட்டுள்ள முருகன், கருப்பாமி ஆகியோர் ஆஜராகினர். ஆனால், நிர்மலா தேவி ஆஜராகவில்லை. 

srivilliputhur court arrest warrant agaisnt nirmala devi

இதையும் படிங்க;- கணவரின் நண்பர் சாக்லேட்டில் மயக்க மருந்து கொடுத்து நிர்வாணம்... வீடியோ காட்டி மிரட்டி அடிக்கடி பலாத்காரம் செய்த காமக்கொடூரன்கள்..!

இது தொடர்பாக நிர்மலா தேவியின் வழக்கறிஞர் பசும்பொன் கூறுகையில், மன நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் நீதிமன்றத்தில் ஆஜராக முடியவில்லை என்று தெரிவித்தார். இதனைக் கேட்ட நீதிபதி பேராசிரியை நிர்மலா தேவிக்கு அளித்திருந்த ஜாமீனை ரத்து செய்து பிடிவாரண்ட் பிறப்பித்த நீதிமன்றம், வழக்கு விசாரணையை 28-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios