விருதுநகரில் மறைமுக உள்ளாட்சி தேர்தலின் போது டிஎஸ்பியை அரிவாள் வெட்டிய ரவுடியை போலீசார் அடித்து இழுத்து தரதரவென இழுத்து செல்லும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றியத்தில் தலைவர் பதவிக்கு மறைமுகத் தேர்தல் நடைபெற்றது. இங்குள்ள 14 வார்டுகளில் திமுக 6, அதிமுக 5 கைப்பற்றின. அமமுக 1, சுயேச்சைகள் 2 இடங்களை பிடித்தன. இதனால் தலைவர் பதவிக்கு கடும் போட்டி நிலவியது. அதிமுக சார்பில் பஞ்சவர்ணம் என்பவரும், திமுக சார்பில் காளீஸ்வரி என்பவரும் களம் இறங்கினர்.

இங்கு வாக்கு எண்ணிக்கை முடிவில் 2 பேருக்கும் தலா 7 ஓட்டுகள் கிடைத்தன. இதனால் தலைவர் யார்? என்பதை தேர்ந்தெடுக்க குலுக்கல் முறை கடைபிடிக்கப்பட வேண்டும். இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. யார் தலைவர் என்பதை நிர்ணயிப்பதில் பிரச்சனை ஏற்பட்டு வாக்குவாதம் உருவானது. ஒருவருக்கொருவர் கடுமையாக மோதிக்கொண்டனர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த அருப்புக்கோட்டை டிஎஸ்பி வெங்கடேசன் மோதலை தடுக்க முயன்றார். அப்போது, அங்கு வந்த 10 பேர் கொண்ட கும்பல் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கி டி.எஸ்.பி. வெங்கடேசன் கையில் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச்சென்றனர். இதனையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த நபர்களை தேடி வந்தனர். 

இந்நிலையில், கண்ணார்பட்டி சுசிபாலா (24), அம்மன்கோவில்பட்டி பெரியகுமார் (22) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்களில் ஒருவரை போலீசார் அடித்து உதைத்து இழுத்து வரும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. டிஎஸ்பி சாரின் கையை வெட்டிய ரவுடிக்கு விருந்து வைத்த காவல்துறையினர் என்ற தலைப்பில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது. 

வீடியோ பார்க்க : டிஎஸ்பி,யை வெட்டிய ரௌடியை விரட்டிப் பிடித்த போலீஸ்..! மரண அடி கொடுத்து இழுத்துச் செல்லும் வீடியோ..