உளுந்தூர்பேட்டை அருகே தனியார் பேருந்து மீது கார் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒரு குழந்தை உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

சென்னையில் இருந்து திண்டுக்கல்லை நோக்கி 4 பேருடன் கார் ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. அப்போது, உளுந்தூர்பேட்டை அருகே கார் சென்றுக்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக காரின் டயர் வெடித்தது. இதில், கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி தடுப்புச் சுவரை உடைத்துக்கொண்டு எதிர்புறம் சாலைக்கு சென்றது. அப்போது, விழுப்புரம் நோக்கி வந்து அதிவேகத்தில் வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதி கார் அடியில் சிக்கிக் கொண்டது. 

இதையும் படிங்க;- மாதவிடாய் என்றும் பாராமல் மிருகத்தை விட கொடூரமாக இளம்பெண் கூட்டு பலாத்காரம்... நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!

இந்த விபத்தில் ஒரு குழந்தை உட்பட 4 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். இதுதொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஜேசிபி இயந்திரத்தை வைத்து கார் மேல் இருந்த தனியார் பேருந்தை தள்ளி விட்டு காரின் இருந்த உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், படுகாயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மற்றொரு குழந்தையை ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கோர விபத்தால் சுமார் 2 மணிநேரத்திற்கு மேலாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.