Asianet News TamilAsianet News Tamil

மகளுக்கு கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்த தந்தை... ஒட்டுமொத்த ஊரையே அதிர்ச்சியில் ஆழ்த்திய சம்பவம்!!

தனது மகள் வேறு சமூக இளைஞரைக் காதலித்து வீட்டை விட்டு ஓடிப்போய் கல்யாணம் செய்து கொண்டதால், உயிரோடு இருக்கும் மகள் இறந்துவிட்டதாகக் கூறி, பெற்ற தந்தையே ஊர் முழுவதும் கண்ணீர் அஞ்சலி போஸ்டர், பேனர் அடித்து வைத்த சம்பவம்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

Father death banner for daughter at village
Author
Vellore, First Published Jun 11, 2019, 4:26 PM IST

தனது மகள் வேறு சமூக இளைஞரைக் காதலித்து வீட்டை விட்டு ஓடிப்போய் கல்யாணம் செய்து கொண்டதால், உயிரோடு இருக்கும் மகள் இறந்துவிட்டதாகக் கூறி, பெற்ற தந்தையே ஊர் முழுவதும் கண்ணீர் அஞ்சலி போஸ்டர், பேனர் அடித்து வைத்த சம்பவம்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம், ஆம்பூரை அடுத்த குப்பராஜபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன். மகள் அர்ச்சனா. இந்தப் பெண்ணும், அதேப் பகுதியில் வேறு சமூகத்தைச் சேர்ந்த ரமேஷ் என்ற  இளைஞரும் காதலித்து வந்தனர்.  இவர்களின் காதல் விவகாரம் பெண்ணின் பெற்றோருக்குத் தெரியவர மகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தது மட்டுமல்லாமல், அந்த இளைஞரை பல முறை கடுமையாக கண்டித்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம்  அந்த இளைஞரை மகள் திருமணம் செய்துகொண்டதால் ஆத்திரமடைந்த சரவணன், தனது மகள் இறந்துவிட்டதாக சொல்லி, ஊர் முழுவதும் ஃபிளக்ஸ் பேனர் மற்றும் போஸ்டர் ஒட்டியுள்ளார். அவர் வைத்துள்ள பேனரில், என் அன்பு மகள் அர்ச்சனா 9-ம் தேதி மதியம் 2 மணியளவில் அகால மரணமடைந்தார். எனது அன்பு மகளின் பூவுடல் 10-ம் தேதி குப்பராஜபாளையம் சுடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்படும். இப்படிக்கு குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் என்று குறிப்பிட்டிருந்தார். உயிரோடு இருக்கும் மகளுக்குத் தந்தையே இப்படி ஒரு காரியம் செய்துள்ளது ஆம்பூர் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மேலும், மகளின் பூவுடல் 10-ம் தேதி குப்பராஜபாளையம் சுடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்படும் என அந்த பேனரில் போட்டுள்ளதால், தங்களை கொலை செய்துவிடுவார்களோ என அச்சத்தில் உள்ள அர்ச்சனாவும், ரமேஷும் மணக்கோலத்தில் பாதுகாப்பு கேட்டு ஆம்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios