ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் அருகே இருக்கும் ஹாஜிபேட்டையை சேர்ந்தவர் நிக்கால். இவரது சகோதரிக்கு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்துள்ளது. அதன்பிறகு நண்பர்களுக்கு நிக்கால் விருந்து வைத்துள்ளார். அதில் அவரது நண்பர்கள் ஆரிப் (20), சையத் (20), கரிமுல்லா (19) துபெயில் அகமது (19), கலீம் (20), முபாரக் (20), இதயத்துல்லா (20), மற்றொரு ஆரிப் (18), சையத் (21), நியாஸ் (18), ஜபருல்லா (19) ஆகிய 11 கலந்து கொண்டுள்ளனர். அதற்காக ஆற்காடு அருகே இருக்கும் பஞ்சபாண்டவர் மலைக்கு  நேற்று இரவு அனைவரும் ஒரு ஆட்டோவில் சென்றனர். ஆட்டோவை ஆரிப் ஓட்டி சென்றார்.

விருந்து முடிந்ததும் நள்ளிரவு 1 மணியளவில் ஆட்டோவில் மீண்டும் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தனர். மேல்விஷாரம் கத்தியவாடி சாலை அருகே ஆட்டோ வந்தது. அப்போது திடீரேன ஒட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ தாறுமாராக சென்று சாலையோரம் இருந்த காம்பவுண்டு சுவர் மீது பயங்ரமாக மோதி கவிழ்ந்தது. இதில் ஆட்டோ நொறுங்கி அதில் பயணம் செய்த சையத், கரிமுல்லா, கலீம், துபெயில் அகமது ஆகியோர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மற்ற அனைவரும் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடினர். அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

திமுக பொதுச்செயலாளர் ஆகிறார் துரைமுருகன்..? விரைவில் அறிவிப்பு..!

தகவலறிந்து வந்த போலிசார் பலியானவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து ஆற்காடு டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோழைகளே.. தைரியம் இருந்தால் இளமதியை தனியாக press meet அனுப்புங்க..! வெடித்துக்குமுறும் திமுக எம்.பி..!