Asianet News TamilAsianet News Tamil

'வேல் வேல் வெற்றி வேல்'..! உலகெங்கும் கோலாகலமான தைப்பூசம்..!

இரண்டாம் படைவீடான திருச்செந்தூரில் பக்தர்கள் நிறைந்து காணப்படுகின்றனர். பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் கடலில் புனித நீராடி முருகனை தரிசனம் செய்கின்றனர்.

thai poosam celebrated today
Author
Thiruchendur, First Published Feb 8, 2020, 5:49 PM IST

தமிழர் கடவுளான முருகனின் உகந்த நாளாக தைப்பூசம் கருதப்படுகிறது. உலகெங்கும் இருக்கும் முருகன் கோவில்களில் இன்று தைப்பூச வழிபாடு கோலாகலமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் இருக்கும் அறுபடை வீடுகள் மட்டுமின்றி அனைத்து கோவில்களிலும் முருகனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.

thai poosam celebrated today

தைப்பூச திருநாள் முக்கியமாக கொண்டாடப்படும் பழனி முருகன் கோவிலில் நேற்று முதல் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். பாதயாத்திரையாக வந்து அலகு குத்தி, மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்தி முருகனை வழிபடுகின்றனர். விழாவின் சிகர நிகழ்வான தைப்பூச தேரோட்டம் தற்போது நடந்து வருகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு தேரை வடம்பிடித்து இழுத்து வருகின்றனர்.

thai poosam celebrated today

இரண்டாம் படைவீடான திருச்செந்தூரிலும் பக்தர்கள் நிறைந்து காணப்படுகின்றனர். பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் கடலில் புனித நீராடி முருகனை தரிசனம் செய்கின்றனர். பக்தர்களுக்கு இடையூறு ஏற்படாதவாறு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன. மலேசியாவில் புகழ்பெற்ற பத்துமலை முருகன் கோவிலிலும் தைப்பூச விழா கோலாகலமாக நடந்து வருகிறது.

அதிவேகத்தில் பைக்கில் மோதிய கலெக்டரின் கார்..! தூக்கி வீசப்பட்டு விவசாயி துடிதுடித்து பலி..!

Follow Us:
Download App:
  • android
  • ios