Asianet News TamilAsianet News Tamil

இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதிய அரசு பேருந்து..! துடிதுடித்து பலியான அண்ணன்-தம்பி..!

கயத்தாறு அருகே இருசக்கர வாகனத்தின் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் இரண்டு பேர் பலியாகினர்.

brothers killed in an accident
Author
Tamil Nadu, First Published Feb 12, 2020, 5:12 PM IST

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே இருக்கும் சவலப்பேரியைச் சேர்ந்தவர் திருப்பதி ராஜா(45). இவருக்கு வசந்தி என்ற மனைவியும், ராஜேஷ் கண்ணன், சதீஷ் கண்ணன் என இருமகன்களும் உள்ளனர். இவரது உறவினர் ராஜகோபால்(32). முன்னாள் பஞ்சாயத்து தலைவரின் மகனான இவருக்கு கடந்த 1 வருடத்திற்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றது. இவரது மனைவி பெயர் பத்மா. இந்த தம்பதியினருக்கு கீர்த்தனா என்கிற 6 மாத கைக்குழந்தை உள்ளது.

brothers killed in an accident

திருப்பதி ராஜாவும் ராஜகோபாலும் உறவுமுறையில் அண்ணன் தம்பி ஆவர். நேற்று மதியம் இருசக்கரவாகனத்தில் இரண்டு பேரும் சவலப்பேரி நாற்கரசாலை அருகே இருக்கும் ஒரு டீ கடைக்கு சென்றுள்ளனர். அப்போது அதே சாலையில் நெல்லையில் இருந்து விளாத்திக்குளம் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்றுள்ளது. இருசக்கர வாகனம் சாலையை கடக்க முயன்றபோது எதிர்பாராதவிதமாக அரசு பேருந்து அதன்மீது பயங்கரமாக மோதியது. இதில் திருப்பதி ராஜாவும் ராஜகோபாலும் பேருந்தின் சக்கரத்தில் சிக்கிக்கொண்டனர்.

brothers killed in an accident

பேருந்து சக்கரம் ஏறி இறங்கியதில் இருவரும் உடல் நசுங்கி துடிதுடித்து பலியாகினர். அதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவலர்கள் இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்திருக்கும் காவலர்கள் பேருந்து ஓட்டுனரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

'வெறுப்பு அரசியலுக்கு டெல்லி கொடுத்த தண்டனை'..! பாஜகவை தாறுமாறாக விமர்சித்த ஜவாஹிருல்லா..!

Follow Us:
Download App:
  • android
  • ios