Asianet News TamilAsianet News Tamil

ஓடும் அரசு பேருந்தில் டிரைவருக்கு ஹார்ட் அட்டாக்… உயிர் போகும் தருணத்திலும் 50 உயிர்களை காப்பாற்றி அசத்தல்..!

சென்னையில் இருந்து திருவள்ளூர் சென்ற அரசு பேருந்தில் ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. அப்போது, கடும் நெஞ்சுவலியையும் பொருட்படுத்தாமல் 50 பயணிகளின் உயிரை காப்பாற்றி விட்டு அவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

government bus driver heart attack
Author
Tamil Nadu, First Published Dec 12, 2019, 6:05 PM IST

சென்னையில் இருந்து திருவள்ளூர் சென்ற அரசு பேருந்தில் ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. அப்போது, கடும் நெஞ்சுவலியையும் பொருட்படுத்தாமல் 50 பயணிகளின் உயிரை காப்பாற்றி விட்டு அவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

government bus driver heart attack

சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவள்ளூருக்கு மாநகர அரசு பேருந்து (தடம் எண்.153ஏ) இன்று காலை புறப்பட்டது. பேருந்தில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தாலுக்கா பள்ளிகுலம் கிராமத்தைச் சேர்ந்த சின்னதம்பி (41) என்பவர் பேருந்தை ஓட்டிச் சென்றார். காலை 8.30 மணி அளவில் மணவாள நகர் என்ற பகுதியில் வரும் போது ஓட்டுநருக்கு சின்னத்தம்பிக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. 

government bus driver heart attack

பேருந்தில் இருக்கும் பயணிகளுக்கு ஏதும் நிகழ்ந்து விடக்கூடாது என்று நினைத்தாரோ என்னவோ, ஒரு கையால் நெஞ்சை பிடித்துக்கொண்டே, மிகவும் பொறுப்புணர்வோடு சாலையோரமாக பேருந்தை நிறுத்தி 50 பயணிகளின் உயிரை காப்பாற்றினார். பின்னர், நெஞ்சுவலியால் துடித்துக்கொண்டிருந்த ஓட்டுநரை திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துவிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios