Asianet News TamilAsianet News Tamil

பிரபல தமிழறிஞர் அதிர்ச்சி மரணம்..!

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் அழைப்பை ஏற்று 2006 முதல் 2008 வரை ஈழத்தில் தங்கியிருந்து அறிவரசன் மாணவர்களுக்குத் தமிழ் கற்பித்தார். அந்த அனுபவங்களை தொகுத்து ஈழத்தில் வாழ்ந்தேன் இரண்டாண்டுகள் என்ற பெயரில் நூலாக எழுதியுள்ளார்.

tamil professor Arivarasan passed away
Author
Alwarkurichi, First Published Mar 5, 2020, 10:20 AM IST

திருநெல்வேலி மாவட்டம், ஆழ்வார்குறிச்சியைச் சேர்ந்தவர் அறிவரசன் என்ற மு.செ.குமாரசாமி (81). இவரது மனைவி ஞானதாய். இந்த தம்பதியினருக்கு முத்துச்செல்வி, தமிழ்ச்செல்வி என இரு மகள்களும், செல்வநம்பி, அழகியநம்பி என இரு மகன்களும் உள்ளனர். தமிழ் பேராசிரியரான குமாரசாமி, ஆழ்வார்குறிச்சி ஸ்ரீபரமகல்யாணி கல்லூரியில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார்.

Arivarasan

வயது மூப்பு காரணமாக வீட்டில் ஓய்வில் இருந்த அவர், உடலநலக்குறைவால் நேற்று மரணமடைந்தார். அவர் உயிரிழந்த செய்தி அறிந்து தமிழ் ஆர்வலர்கள் பலர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.  இவர், புத்தன் பேசுகிறான் என்ற கவிதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார். மாமனிதர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை, தமிழ் அறிவோம், தமிழ்ப் பெயர்க் கையேடு, இவர்தாம் பெரியார், சோதிடப் புரட்டு உள்ளிட்ட பல நூல்களையும் எழுதியுள்ளார்.

இந்து முன்னணி பிரமுகர் மீது கொலைவெறி தாக்குதல்..! கோவையில் பரபரப்பு..!

tamil professor Arivarasan passed away

 விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் அழைப்பை ஏற்று 2006 முதல் 2008 வரை ஈழத்தில் தங்கியிருந்து அறிவரசன் மாணவர்களுக்குத் தமிழ் கற்பித்தார். அந்த அனுபவங்களை தொகுத்து ஈழத்தில் வாழ்ந்தேன் இரண்டாண்டுகள் என்ற பெயரில் நூலாக எழுதியுள்ளார். லண்டன், இத்தாலி, கனடா, ஸ்விட்சர்லாந்து, ஆஸ்திரேலியா, நார்வே உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று அங்குள்ள தமிழ் ஆசிரியர்களுக்குத் தமிழ் கற்பித்துள்ளார். இவருக்கு பகுத்தறிவாளர் கழகம் "தமிழிசைப் பாவாணர்' என்ற பட்டத்தையும், கடையம் திருவள்ளுவர் கழகம் "பைந்தமிழ் பகலவன்' என்ற பட்டத்தையும் வழங்கி கௌரவித்துள்ளன.

உயிரிழந்த குமாரசாமியின் உடல் அவரது விருப்பப்படி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இன்று தானமாக வழங்கப்படுகிறது. 

நாடகக்காதல் ஆதரவாளருக்கு திரௌபதி சாதிவெறியாக தான் தெரியும்..! வீரமணியை வெளுத்து வாங்கிய ராமதாஸ்..!

Follow Us:
Download App:
  • android
  • ios