Asianet News TamilAsianet News Tamil

கோவையில் அதிர்ச்சி சம்பவம்... இந்தியன் வங்கி முன்பு விவசாயி தற்கொலை..!

கோவையில் இந்தியன் வங்கி முன்பு விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

farmer commits suicide by drinking poison in Coimbatore
Author
Tamil Nadu, First Published Aug 1, 2019, 6:02 PM IST

கோவையில் இந்தியன் வங்கி முன்பு விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

சேலம் மாவட்டம் சங்ககிரி கொங்கணாபுரத்தைச் சேர்ந்தவர் விவசாயி பூபதி. இவர் கடந்த 2005-ம் ஆண்டு பால் பண்ணை வைப்பதற்காக நண்பர்கள் மூவருடன் சேர்ந்து பத்திரங்களை அடமானம் வைத்து இந்தியன் வங்கியில் 9 கோடி ரூபாய் பணம் வாங்கியதாக கூறப்படுகிறது. farmer commits suicide by drinking poison in Coimbatore

பால் பண்ணை லாபகரமாக இயங்காததால், தன்னுடைய கடனை திருப்பி செலுத்திட முடிவெடுத்தார். இதற்காக அவர் வங்கி சென்று எவ்வளவு பணம் செலுத்த வேண்டும் என்று கேட்டார். ஆனால், நண்பர்களின் கடனையும் சேர்த்து செலுத்தமாறு வங்கி அதிகாரி நெருக்கடி கொடுத்ததாக தெரிகிறது. இதனால், வங்கி மேலாளருக்கும், பூபதிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. farmer commits suicide by drinking poison in Coimbatore

இதனால், மனமுடைந்த பூபதி வங்கிக்கு வெளியே விஷம் குடித்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். இதனையடுத்து, இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் வங்கி மேலாளரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios