Asianet News TamilAsianet News Tamil

தொடர்ந்து எங்கள் வயிற்றில் அடிக்கிறார் எடப்பாடி... கொதித்தெழும் விவசாயிகள்..!

பாலம் நகரமாக இருக்கும் சேலம் இப்போது சாலை நகரமாக உருவெடுக்க ஆரம்பித்துவிட்டது. எட்டு வழிச்சாலை மூலமாக மத்திய மாநில அரசுகள் இந்த வேலையை செய்வதாக சேலம் மக்கள் கொதித்து எழுந்திருக்கிறார்கள்.

chennai-salem 8-way project...Turmoil former
Author
Tamil Nadu, First Published May 22, 2019, 12:59 PM IST

பாலம் நகரமாக இருக்கும் சேலம் இப்போது சாலை நகரமாக உருவெடுக்க ஆரம்பித்துவிட்டது. எட்டு வழிச்சாலை மூலமாக மத்திய மாநில அரசுகள் இந்த வேலையை செய்வதாக சேலம் மக்கள் கொதித்து எழுந்திருக்கிறார்கள். 

சேலம் - சென்னை இடையே ரூ.10 ஆயிரம் கோடி செலவில் 8 வழிச்சாலை அமைக்க அரசு நடவடிக்கை எடுத்தது. சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்கள் வழியாக இந்த சாலை அமைகிறது. இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கியது. இதையொட்டி கல் நடும் பணியும் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து 8 வழிச்சாலைக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது. chennai-salem 8-way project...Turmoil former

8 வழிச்சாலையால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாக கூறி விவசாயிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் இந்த போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தில்,“8 வழிச்சாலைக்கு 7 சதவீதம் பேர் தான் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என சொன்னார். முதல்வரின் இந்த பேச்சை கண்டித்து 8 வழிச்சாலைக்கு எதிராகவும் நேற்று காலை சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அருகே ராமலிங்கபுரத்தில் உள்ள ஒரு தோட்டத்தில் விவசாயிகள் மற்றும் பெண்கள் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

 chennai-salem 8-way project...Turmoil former

அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள் விவசாயிகள். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியது கோர்ட்டு அவமதிப்பு ஆகும். எனவே முதல்-அமைச்சர் பதவி விலக வேண்டும், இந்த 8 வழிச்சாலையை ஏற்கனவே உள்ள சேலம்-ஊத்தங்கரை சாலையில் அமைக்க வேண்டும் என உரக்க முழக்கமிட்டனர்.  “விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களை மக்கள் உணவாக உட்கொள்கிறார்கள். chennai-salem 8-way project...Turmoil former

விவசாயிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காமல் 8 வழிச்சாலையை அமைத்தே தீருவோம் என்று அரசு கூறி வருகின்றது. நீதிமன்ற தீர்ப்பை அரசு செயல்படுத்த வேண்டும். நிலத்தை கையகப்படுத்துவதால் விவசாயிகள் வாழ்வாதாரம் பறிக்கப்படுகிறது. வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் என்று அரசு கூறுகிறது. ஆனால் 8 வழிச்சாலையால் ஆயிரக்கணக்கான மரங்கள் அழிக்கப்படுகின்றன. எனவே இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்கின்றனர் போராட்டத்தில் ஈடுபட்டும் விவசாயிகள். விவசாயிகளின் இந்த போராட்டத்தால் சேலமே பரபரத்துகிடக்கிறது

Follow Us:
Download App:
  • android
  • ios